யாருக்கு தேவை

பாரத தாய் அழகுற கேட்டோம்
பாவைகளின் சுதந்திரம் கேட்டோம்
இன்னல்கள் போக்கிட கேட்டோம்
இளைஞர்களின் வேலை கேட்டோம்
மழலை சிரிப்பை கேட்டோம்
மயக்கும் தென்றல் காற்றை கேட்டோம்
மரங்களின் கிளைகளில்
கானக்குயில்கள் கேட்டோம்
வயல்களில் விவசாயம் கேட்டோம்
விவசாயின் நலம் கேட்டோம்
நாங்கள் கேட்டது இவை
ஆனால்
மழலை மொழி மறந்தது
பிழைகள் எல்லாம் சரி என்றானது
பரிதாபங்கள் எல்லாம் காசுடன் போனது
அரசியல் எல்லாம்
எங்கோ போனது
நெலமணிகள் எல்லாம்
போனது எங்கே?
விளைநிலங்கள் எல்லாம்
சாலை ஆனது
விவசாயின் சமாதியில்
வீறுகொண்டு செல்கிறது
புதிய சாலைகள்
வாழ்க பாரதம்
வாழ்த்தாதீர்!

- மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (30-Jun-18, 3:31 pm)
Tanglish : yaruku thevai
பார்வை : 556

மேலே