சதுரங்கம்

காய் நகர்த்துகிறார்கள்,
மூளையின் வலுவில்.

நகர்கிறார்கள்.
நகர முயற்சிக்கிறார்கள்.

சிலரால் மட்டுமே
காய்களை வெட்டிக்கொண்டே
போக முடிகிறது,
மூளையின் பலத்தாலோ?
சந்தர்ப்ப வசத்தாலோ?

இவனை வென்ற அவன்
இன்னொருவனிடம் தோற்கிறான்.

வெட்டுப்பட்டவை
காய்களா? நியாயங்களா?

எழுதியவர் : வானம்பாடி கனவுதாசன் (30-Jun-18, 7:33 pm)
Tanglish : sadhurangam
பார்வை : 45

மேலே