பெங்களூர் நகரம்

எறும்பு போல் வரிசை வரிசையாக செல்லும் வாகனங்கள்….
நகர்ந்து கொண்டே இருக்கும்
மனிதர்கள்….

சாலையோர கடைகள்…

அம்சமாக கோவில்கள்
அவசரமான மனிதர்கள்….

அலை அலையாய் பறக்கும்
புறாக்கள்…..

எங்கு பார்த்தாலும்
வான் உயர்ந்த கட்டிடங்கள்…..

உறவுகள் அல்லா வீடுகள்…

எப்போதாவது திறக்கும்
வீட்டின் கதவுகள்….

எப்பொழுதும் பனியாய் ….

எப்போதாவது வெயிலின் முகம்…

சாலை வியாபாரிகளின் குரல்கள்
ஒலிப்பெருக்கி போல் ஒலிக்கும்…

காலை வரும் சூரியன் முதல்
இரவில் வரும் சந்திரன் வரை
யாவும் நகர்ந்து செல்கின்றன …

ஆனால்,

நான் மட்டும் இங்கே
தனியாய்…
என் வீட்டறையின் அமைதியிலும் , நான்குசுவர்களினுள்ளும்
தொலைந்து போன என்னை தேடிக்கொண்டு இருக்கிறேன்…..
என்னை மீட்டுஎடுக்க ...

எழுதியவர் : சிவசங்கரி (1-Jul-18, 8:54 pm)
Tanglish : pengaloor nakaram
பார்வை : 77

மேலே