சாம்பலாகிய சாமி

ஈர கீற்றிலே இதயம் போகுதே
இறைவன் கணக்கிலே இதுவும் சேருதே

பூமி தந்த பூக்களாய் நானும்
மண்ணில் பிறந்தேன்

தாய் தந்தை அன்பிலே
உலகில் மறந்து நடந்தேன்

மனித மிருகம் வேட்டையாடி
கொண்றதே

முகமூடி போட்டு முழு நிலவு
மறைந்ததே

முன்னும் பின்னும் உறவுகள்
கதறுதே

சிறகு போல பறந்தேன்
இறகு போல எறிந்தேன்

துள்ளி ஓடும் மழலையை
இரக்கமற்று அழிப்பதா

கொஞ்சி பேசும் குழந்தையை
கோபம் கொண்டு எறிப்பதா

ஏழு வயதிலே ஏடு முடிந்ததே
என்னை இழந்தததால் உலகம் எழுந்ததே!!

வண்ண வண்ண மீனாய்
வானில் நானும் மிதந்தேன்

காட்டில் கலந்த காணலாய்
என்னை நானும் உணர்ந்தேன்

தாலாட்டு பாடும்
தாயின் அன்பு வேண்டும்

தந்தை தோள் மீது சாய
மண்ணில் மீண்டும் வேண்டும்

ஆறடி மண்ணில்
ஆசை புதைந்ததே

ஆண்டவன் கணக்கில்
ஆயுள் முடிந்ததே .....

ஆ.கார்த்திக்

எழுதியவர் : ஆ .கார்த்திக் (3-Jul-18, 7:10 pm)
சேர்த்தது : ஆகார்த்திகேயன்
பார்வை : 63

மேலே