எது சுதந்திரம்
இந்நாட்டில் கொள்ளையடித்து
வெளிநாட்டிற்கு தப்பிச்செல்ல
தொழிலதிபருக்கு சுதந்திரம்
நம்நாட்டு வளங்களை
அயல்நாடு சூறையாட
இஷ்டம்போல சுதந்திரம்
காடுகளை அழித்துவிட்டு
கட்டுமானம் கட்டிடவே
பல மதகுரு மார்களுக்கு சுதந்திரம்
காற்றினை மாசுபடுத்தி
நச்வாயு வெளியிடவே
தொழிற் சாலைக்கு சுதந்திரம்
ஆற்றுநீரை அழுக்காக்கி
கழிவுகளை கலந்துவிட
சாய பட்டறைக்கு சுதந்திரம்
நதிகளின் ஓட்டத்தை
அண்டை மாநிலங்கள் அணைக்கட்டி
தனக்கெனவே உறைத்திடவே
இந்திய நாட்டினில் தடையில்லா சுதந்திரம்
உரிமை மீட்டிடவே குரலை உயர்த்திட்டாள்
குருவியைப் போல் சுட்டுத்தள்ள
அதிகார சுதந்திரம்
கட்டணம் வசூலிக்க
கட்டுப்பாடு ஏதுமில்லை
கல்வி நிறுவனங்களின் சுதந்திரம்
இந்தாண்டு முடிவதற்குள்
முடிந்தவரை நிரப்பிக்கொள்ள
அரசியல் கட்சிகளுக்கு சுதந்திரம்
இதற்குத் தான் பெற்றோமா சுதந்திரம் ?
இந்திய நாட்டின் ஆயுள் கூட்ட
இணையில்லா இயற்கை வளங்களை
இதயமாக பாதுகாக்க கிடைத்து எங்கள் சுதந்திரம்
ஏற்றத்தாழ்வு ஏதுமில்லா
சமத்துவ சமூகம் வாய்த்திடவே
பெற்றோம் நாமும் சுந்தந்திரம்
மகத்தான வாய்ப்புகள்
மண்ணின் மைந்தருக்கு தேடிவர
வாழ்க்கைத்தரத்தை உயர்த்திடவே
போராடி கிடைத்த சுதந்திரம்
மறைந்துபோன சுதந்திரத்தை
மீட்டெடுக்க துவங்குவோம்
அத்துமீறும் சுதந்திரத்தை
வீழ்த்த உருதிக் கொள்ளுவோம்.