கோபம் கொண்டேன் கோபம் கொண்டேன்

கோபம் கொண்டேன்...
கோபம் கொண்டேன்...
என்று என்னை சுற்றி
பறைசாற்றுபர்களுக்கு தான்
என்ன தெரியும்....
என் கோபத்திற்கு அவர்களும்
ஒரு காரணம் என்று...
காட்டில் வாழும் சிங்கம்
அனுதினமும்
கோபத்தோடு
சுற்றி திரிவதில்லை...
அது போல தான் நானும்....
சூழ்நிலையின் சுழற்சியில்...
பிறரின் சூழ்ச்சியால்...
கோபத்தீயில்... மதிகெட்டு...
விழுந்தேன்...

கோபம் வேண்டாம் என்று
அறிவுரை கூறும் அன்பர்களே...
உற்ற நண்பர்களே...
சற்றே சிந்தித்து பார்க்க மறுப்பதேன்...???
இன்று
என் இந்நிலைக்கு காரணம் யார்..???
நானா ...???
ஒரு சேதி மட்டும் விளங்கவில்லை எனக்கு....!!!
இன்று வரையிலும் நீங்கள் யாவரும்...
கோபத்தின் பிடியில் சிக்கியது இல்லையா என்ன ????
" சாது மிரண்டால் காடு கொள்ளாது"
என்பது பழமொழி...
சாதுவாக இருக்க விட்டீர்களா என்னை....???
இனி..
சினம் கொண்டு தொலைத்தவை ஏதும் இல்லை...................
என் குணத்தை தவிர....
நிலவில் தீட்டப்பட்ட
கருப்பு நிறத்தை போல...
என் குணமும் கோபத்தால்...
சிதைந்தே போனது....

எழுதியவர் : லீலா லோகிசௌமி (4-Jul-18, 2:02 pm)
சேர்த்தது : லீலா லோகிசௌமி
பார்வை : 185

மேலே