போதவில்லை

படித்தவனை விட
பட்டதில் அறிந்தவன்
பிழைத்துக் கொள்வான்,
செல்லாக் காசானவனையும்
செல்வந்தனாக்கி
சிறப்படையச்செய்யும் இது

அரிய ஒரு பள்ளிக்கூடம்
அறிந்து தெரிந்து கொண்டால்
கள்வனேயானாலும்
கடைசிவரை கைவிடாது
கருணையுடன் காத்தருளும்,
முதியோரிடம் மிகுந்து காணும்

வாழ்க்கை பயணத்தை
வழிநடத்தும் ஊன்றுகோல்,
பலமுறை தோற்றாலும்
பட்ட துயரெல்லாம் பாடமாகும்,
எதையும் மறைத்து சொல்ல
எனக்கு அநுபவம் போதவில்லை

எழுதியவர் : கோ. கணபதி. (4-Jul-18, 3:03 pm)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : pothavillai
பார்வை : 57

மேலே