போதும் அன்பே இந்த ஜென்மம்

கனவுகள் மட்டும் வாழ்க்கை என்றால்
இரவுகள் மட்டும் போதும் அன்பே.........
நினைவுகள் தான் வாழ்க்கை என்றால்
நிமிடங்கள் ஒவ்வொன்றும் ரணங்கள் என்பேன்.........
கனவுகள் ஏனோ கலைந்து செல்ல
இரவுகள் யாவும் இம்சைகளாகின
உன் நினைவுகளால்...............
போதும் உயிரே!
உனக்காக வாழ்ந்த இந்த ஜென்மம்
உன்னோடு வாழ வேண்டுமொரு ஜென்மம்......!

எழுதியவர் : சோட்டு வேதா (4-Jul-18, 2:59 pm)
சேர்த்தது : சோட்டு வேதா
பார்வை : 213

மேலே