மலைகள்

பர்வதங்களை காணும் போது
பரவசமடைகிறது மனம்...
அனைத்தையும் தன் கைக்குள்
அடக்கி ஆளவே துடிக்கிறது
மனித குணம்...

கைக்குள் அடங்குமா?
நடந்ததை மாற்ற முடியுமா?
பின் ஏன் பிறந்தோம்?
பிறந்தால் சாதிக்க வேண்டாமா?

மனம் சற்று
சஞ்சலமடைகிறது...

நாம் ஏமாந்து விட்டோமா?
ஏமாற்றுகிறோமா?

சரியான பாதை எது?

குழம்பிக் கொண்டிருக்கையில்
உலக உருண்டையில்
எத்தனை மேடு பள்ளங்கள்?

நடக்கும் பாதையில் கவனம்
வேண்டும்...
அதற்கு முன் அந்த பாதை சேரும் இடம்
தெரிந்திருக்க வேண்டும்...

ஆனால்...?

நான் இன்னும் சாதிக்கவில்லை...
அந்த சாதனைக்காக முழுமுயற்சியோடு
செயல்படவில்லை...

ஒருபக்கம் தாய், மறுபக்கம் தந்தை,
ஈன்றெடுத்து வாழ்வை தந்த
அவர்களுக்காக என்ன செய்தேன்?

கண்மூடி திறப்பதற்குள் வாழ்வில்
கால் பங்கை காணவில்லை...
மனம் கொண்ட லட்சியத்தை
அடைய பாதைகள் தெளிவாக
தென்படவில்லை...
ஒவ்வொருவரும ஒவ்வொரு விதமாக சொல்ல
மனம் கண்ட ஞானம் பொய் என்றே
தொன்றுகிறது...

அதற்கு காரணம், நிலையான மனநிலையை
நான் அடையாததாக இருக்கலாம்...

எனது சிந்தனைகளை
யாரிடமும் திணிப்பதில்லை...
அவர்களுடைய உணர்வுகளை
மதிக்கிறேன்...
இந்த பக்குவத்தைத் தந்தது
பர்வதங்களே...
ஆதலால், பர்வதங்களுக்கு
நன்றி சொல்கிறேன்...

கட்டிடங்களுக்குள் முடஙகி விடாது,
கைபேசிக்குள் மூழ்கி விடாது,
தொழிற்நுட்பங்களை விட்டு
வெளியே வந்து
இயற்கையின் வெளிச்சத்தைப்
சிறிதாவது காணுங்கள்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (5-Jul-18, 11:32 am)
Tanglish : malaikal
பார்வை : 5257

மேலே