நண்பன்
நட்புக்கு மரியாதை,
அது உன் சுயசரிதை.
ஆழ்கடல் ஆழம்,
அது உன் பாசம்.
பனியின் உருக்கம்,
அது உன் கோபத்தின் இறக்கம்.
புயலின் வேகம்,
அது உன் கோபத்தின் உச்சம்.
நீயும் நானும் ஈரேழு ஜென்மம்,
நிலையாய் வாழும் நம் நட்பு.
துன்பமும் துயரமும் என்னை தாக்க,
உன் அன்பும் நட்பும் என்னை காக்க.
கோபமும் சண்டையும் உன் தவறல்ல
அது உன் நட்பின் எதிர்பார்ப்பு.
நட்பில் எதிர்பார்ப்பு நன்மை,
அதிதீத எதிர்பார்ப்பு நட்பின் வெறுமை.
ஆயிரம் உறவு எனக்கு,
நீ மட்டும்தான் எனக்கு வரவு.
நண்பனை விளக்கலாம்,
நட்பை முடியாது உன் நினைவுகளில்.