சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே - பிருந்தாவன சாரங்கா
சிவாஜி கணேசன் - எஸ்.வரலக்ஷ்மி நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் (1959) திரைப்படத்திற்கு கு.மா.பாலசுப்பிரமணியம் இயற்றி ஜி.ராமநாதன் இசையமைப்பில் எஸ்.வரலக்ஷ்மி பிருந்தாவன சாரங்கா ராகத்தில் பாடிய ஒரு இனிமையான பாடல் 'சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே'
சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி (சிங்காரக் கண்ணே)
மங்காத பொன்னே
மங்காத பொன்னே உன் வாய் முத்தம் ஒன்றாலே
மாறாத இன்பங்கள் சேர்ப்பாயடி (சிங்காரக் கண்ணே)
வாடாத ரோஜா உன் மேனி
வாடாத ரோஜா உன் மேனி - துள்ளி
ஆடாதே வா சின்ன ராணி
பூவான பாதம் நோவாத போதும்
புண்ணாகி என் நெஞ்சம் வாடும்
பாராளும் மாமன்னர் மார் மீதிலே நீ
சீராட வாராய் செந்தேனே - இந்தப்
பாராளும் மாமன்னர் மார்மீதிலே நீ
சீராட வாராய் செந்தேனே (சிங்காரக் கண்ணே)
செவ்வல்லிக் கை வண்ணம் காட்டி ஆ..ஆ..
செவ்வல்லிக் கை வண்ணம் காட்டி எங்கள்
சிந்தை எல்லாம் இன்பமூட்டி நீ
ஆடாதே கண்ணே யாரேனும் உன்னை
கண்டாலும் ஆகாது மானே
அன்பென்னும் ஆனந்தப் பூங்காவிலே நீ
பண் பாட வாராய் செந்தேனே
சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்த்தாயடி