அவளுக்கு அவன் விண்ணப்பம்
அழகின் மொத்த உருவே நீ
வானை நோக்கி பார்ப்பதென்னவோ
அந்த முழு நிலவும் உன் அழகைத்தேடி
அல்லவா உன் முற்றம் தேடி வருகிறான்
பௌர்ணமி தோறும் , பாவையே ஆதலால்
கொஞ்சம் மனமிரங்கி இதோ உனக்காகவே
உன் முகம்காண தவமிருக்கும் என்னை
உன் கடைக்கண்ணால் பார்ப்பதெப்போதோ
உன் எதிர் வீட்டில் உனக்காக காத்திருக்கும்
இந்த இளங்காளையின் காதல் விண்ணப்பமடி இது.