நயன மந்திரம் அவள் பார்வை

பறக்கும் கருடன்
சிறகுகள் தரும்
காற்றிற்கு மயங்கி
கட்டுண்ட நாகம்போல்,
மலரே. உன் கண்களின்
பார்வை என்னை மயக்கி,
என் மனதை கட்டிவிட்டதே;
அது உன் பார்வை ஒன்றே
தஞ்சம் என்று ஏங்குகிறதே,
இது என்ன' நயன மந்திரமோ'
உனையறியாத மாயம், உந்தன்
கண்களில், அது அந்த
மயன் தந்தே பிரம்மனிடம்
அனுப்பிவைத்தானோ உனைப்படைத்தபோது
உன் கண்களில் இருப்பது
கண்ணி இள மானே, நயன மந்திரம்
நயனமந்திரம் என்று என் மனம் சொல்லுதே.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Jul-18, 9:34 am)
பார்வை : 95

மேலே