விரலிடுக்கில் கசியும் வெளிச்சம்
விரலிடுக்கில் கசியும் வெளிச்சம்
நம்மிடையேயான பரிவர்த்தனைகளை
நினைவு கூர்ந்து கொண்டே
நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது
படரும் இடமெல்லாம்
நம் நம்பிக்கையின் வலிமையையும்
இயலாமையின் பெரும் சுமையையும்
விருத்தியின் உச்சத்தையையும்
காலத்தின் நியதியையும்
உனக்கும் எனக்கும் பறைச்சாற்றிக்கொண்டு
நெஞ்சில் ஈட்டியெறிந்தபடி பாய்ந்து கொண்டிருக்கிறது