ஏமாற்றாதே ஏமாறாதே

ஏமாற்றுவது கொடியது; ஏமாறுவது அதைவிடக் கொடியது...

பொறுமையாய் இருப்பவனை ஏமாறுகிறவன் என்று எண்ணாதே...

மரியாதையினிமித்தம் செவிசாய்ப்பவனை ஆட்டுவிக்கலாம் என தப்புக்கணக்கிடாதே...

கோபத்தை கட்டுப்படுத்தத் தெரிந்தவன் மீது சொற்களை வீசி பரீட்சை செய்யாதே...

விட்டுக்கொடுத்துப் போகிறவனை பரியாசம் செய்யாதே...

அவமானத்தை சந்தித்தவனிடம் சவால் விட்டு தோற்காதே...

பொறுமை கடைபிடிப்பவனை தொடர்ந்து ஏமாற்றங்களால் நிரப்பாதே...

எல்லைதாண்டும்வரை கடல் அலைகளிடம் விளையாட தயக்கம் இல்லை...

எழுதியவர் : ஜான் (8-Jul-18, 9:21 pm)
பார்வை : 155

மேலே