இதயத்தின் ஓசை கேட்கவில்லையா

உன் விறல் தொட - நானும்
சிலிர்க்கின்றேன்..

உன் கண்கள் தீண்ட - நானும்
பூக்கின்றேன்...

உன் சிரிப்பினில் இன்பத்தை பெறுபவள் நான்..
உன் குரலில் சுகத்தை காண்பவள் நான்..

உன்னோடு பேச நினைக்கும்
என் இருதயத்தின் ஓசை ,
ஒருமுறையேனும் உனக்கு கேட்கவில்லையா ?

கேட்காதது போல் நீ நடிப்பதென்றால் !!
போதுமடா!!! நிறுத்திவிடு!!

உன் நடிப்பை அல்ல...
என் இதய துடிப்பை...

எழுதியவர் : Rathika (8-Jul-18, 9:56 pm)
சேர்த்தது : rathika
பார்வை : 230

மேலே