பிரான்சிஸ் அட்டிகல கொலை வழக்கு

இலங்கையில், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், 19ஆம நூற்றாண்டில், நடந்த கொலைகளில் பிரான்சிஸ் டிக்சன் அட்டிகல என்பவரின் கொலையும் ஓன்று. . சொத்துக்காக இந்த கொலை இடம் பெற்றது . 19ஆம நூற்றாண்டில் சில சிங்கள குடும்பங்கள் பல சொத்துகளுக்கு உரிமையளர்கள் ஆனார்கள் . அவர்களில் கொலை செய்யப் பட்டவரின் தந்தை பிலியந்தலாவை சேர்ந்த முதலியார் அட்டிகல என்பவரும் ஒருவர். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பணம் படைத்த உயர் சாதி வர்கத்தினருக்கு முதலியார் பட்டம் பிரிட்டிஷ் ஆட்சி வழங்கியது . முதலியார் பட்டம் கொடுத்த பின் அவரகளின் சேவையை மதித்து அதன் பின் கேட் முதலியார், இறுதில் உயர் பதவியான சேர் பட்டம். கொடுக்கப் பட்டது இவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் அடிவருடிகள். இன்றைய பேரினவாதி சிங்கள அரசியல் வாதிகளான இலங்கையியன் பிரதராக இருந்த் சேர் ஜோன் கொத்தலாவல பண்டாரநாயக்கா போன்ற பலரின் மூதாதையர் அத்தகைய அடி வருடிகளே.
இலங்கையில் சிங்களப் பெயர்கள் எல்லாம் நீண்ட பெயர்கள். 1834. யில் பிறந்த டொன் சார்ல்ஸ் ஜெமொரிஸ் அட்டிகல முதலியார் பல நிலங்களுக்கு உரிமையாளர் . பல ஏக்கர் ரப்பர், கோப்பி, தேயிலை. கறுவாத் தோட்டங்களுக்கும் கிராபைட் என்னும் தாதுப் பொருள் சுரங்கத்துகும் உரிமையாளர் . ஆரம்ப காலத்தில் தாவரப் பூங்காவில் வேலை செய்து பிரிட்டிஷ் வியாபாரிகளுக்கு அவர்கள் விரும்பிய தாவரங்களைக் கொடுத்து, அவர்களின் ஆதரவைப் பெற்று ,முதலியார் பட்டம் பெற்றார் . பிரிட்டிஷ் வியாபாரிகள் விரும்பிய தாவரங்களை காட்டில் தேடும் பொது அவர் கிராபைட்(Graphite – Plumbago) என்னும் தாதுப் பொருள் சுரங்கம் ஒன்று இருப்பதைக் கண்டு, அந்த நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி. கிரபைட் சுரங்கத்தை அபிவிருத்தி செய்து, அதன் உரிமையாளரானார்.
அக்காலத்தில் பந்துமுனைப் பேனா ( Ball point pen) இருந்ததில்லை ஆகவே பென்சில் செய்வதற்கு கிரபைட் பாவித்ததால் அந்த தாதுப் பொருளுக்கு இங்கிலாத்தில் நல்ல மதிப்பு இருந்தது.. அத்தேசத்துக்கு இலங்கையில் இருந்து கிராபைட் ஏற்றுமதி செய்து பெரும் பணம் சம்பாதித்தார்.
இந்த தனவந்தருக்கு நான்கு பிள்ளைகள் இருந்தனர் . முதல் மூன்றும் பெண்கள் கடைசியாக பிரான்சிஸ் டிக்சன் அட்டிகல என்ற மகன் பிறந்தான் . மூத்த பெண் அலிஸ் என்பவள் போலீசில் சார்ஜண்டாக வேலை செய்த சி ஜோன் கொத்தலாவல (சீனியர்) என்பவரை மணந்தாள். இரண்டாவது பெண் எலன், செனனாயக்கா என்பவரையும்
மூன்றவது மகள் கேர்னல் ஜெயவர்தனே என்பவரையும் மணந்தார்கள். கேர்னல் ஜெயவர்தனே என்பவர் ஒரு காலத்தில் 1983இல் நடந்த இனக்கலவரத்தின் போது இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த ஜே ஆர் ஜெயவர்தனாவின் தகப்பன் வழி மாமனாவார்
போலீசில் சார்ஜண்டாக வேலை செய்த சி ஜான் கொத்தலாவலவுக்கும் அவர் திருமணம் செய்த அலிஸ்க்கும் இருமகன்கள் பிறந்தார்கள். அவர்களில் மூத்தவர் சேர் ஜோன் கொத்தலாவல என்பவர் இவர் 1953முதல் 1957 வரை பிரதமராக இருந்து 1980 இல் 84 வயதில்
காலமானவர். இவர் இலங்கையின் மூன்றாம் பிரதமராவார். போலீசில் சார்ஜண்டாக இருந்த அவரின் தந்தை சீனியர் சி ஜோன் கொத்தலாவலவுக்கு அவரின் சேவையை பாராட்டி பிரிட்டிஷ் அரசாங்கம் பதவி உயர்வு கொடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக்கியது . அக்காலத்தில் அரச சேபையில் இருப்பவர்கள் வணிகமும் செய்யலாம்.. அதளால் சி ஜான் கொத்தலாவல வணிகமும் செய்தார் .
முதலியார் அட்டிகல இறந்த பின் பின் அவரின் சொத்துகளைப் பரிபாலனம் செய்யும் பொறுப்பு சீனியர் சி ஜோன் கொத்தலாவல கையில் போனது. அப்போது முதலியார் அட்டிகலவின் இளைய மகன் பிரான்சிஸ் டிக்சன் அட்டிகல கொழும்பு வெல்சிலி (Wesley) கல்லூரியில் படித்து முடித்து அவரது மதிப்புக்கு பாத்திரமான அவரின் ஆசிரியர் டயஸ் என்பவர் வீட்டில் புறக்கோட்டையில் வசித்து வந்தார். .
****
காலப் போக்கில் சீனியர் சி ஜான் கொத்தலாவலவுக்கு முதலியார் அட்டிகல சொத்து மேல் ஆசை ஏற்பட்டது. தனது போலீஸ் உத்தியோகத்தை இராஜினாமா செய்து சொத்துக்களை கவனிக்கத் தொடங்கினார் . சொத்தினை பராமரிப்பதன் மூலம் வந்த பணத்தை கையாடத் தொடங்கினார் அதனால் அவரின் மாமியாரல் குருணாகல் நீதி மன்றத்தில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவாகியது பின்னர் அவர் இலங்கை - ஜப்பான் வர்த்தக கூட்டுறவு என்ற அமைப்பை உருவாக்கி ஜப்பானுக்குச் சென்றார்.

அட்டிகல முதலியாரின் ஒரே மகன் பிரான்சிஸ் டிக்சன் 16 வயதிலேயே வெஸ்லி கல்லூரியை விட்டுச் சென்றார், ஆனால் மூத்த முன்னாள் போலீஸ் அதிகாரியாக இருந்த அவரது மைத்துனரான ஜான் மீது அவரது சோத்தினை துஷ்பிரயோகம் செய்ததை து நீதி மற்றதில் அவர் மிகவும் இளமையாக இருந்ததபடியால் முறையீடு செய்ய முடியவில்லை. அவரின் ஆசிரியர் டயசின் உதவியோடு கவர்னருக்கு தன் நிலையை விபரித்து முறைப்பாடு செய்தார். அக்காலத்தில் கவர்னர் தீர்மானித்தால் எதுவும் செய்யலாம். தனது அதிகராத்தை பாவித்து கவர்னர். பிரான்சிஸ் டிக்சன் மீது இருந்த வயது கட்டுப்பாட்டினை நீக்கினார் . அதனால் அவருக்குத் தந்தையின் சொத்தில் உரிமை இருந்த்து
****

மூன்றவது மகள் மணந்த கேர்னல் ஜெயவர்த்தன குடும்பதுக்கும் மற்றும் அட்டிகால குடும்பதுக்கும் இடையே இருந்த நெருக்கம் சீனியர் சி ஜான் கொத்தலாவலவுக்கு எரிச்சலைக் கொடுத்தது. அவர்களின் தூண்டுதளின் காரணத்தால் தன் மீது வழக்குகளை தன் மாமியரும் மைத்துனர் பிரான்சிஸ் டிக்சன் அட்டிகலவும் பதிவு செய்துள்ளார்கள் என்ற தீர்மானித்ததுக்கு வந்தார். குடும்பத்தினுள் சொத்து பற்றி பிரச்சனைகள் தோன்றிற்று

ஒரு நாள் குடும்ப அங்கதினர்கள் ஒன்றாக கொண்டாடிய பார்டியில் கேர்னல் ஜெயவர்த்தனாவுடன் சீனியர் ஜோன் கொத்தலாவலவுக்கு ஏற்கனவே ஜெயவர்த்தனாவின் மேல் வெறுப்பு இருந்தது. அதனால் தன் இஸ்டத்தின் படி சொத்தியில் இருந்து வரும் பணத்தை செலவு செய்ய அவர் விடவில்லை என்பதால், ஜோனுக்கு கோபம். அதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஜெயவர்த்தனாவின் பூர்வீகத்தை "தம்பியாஸ்" - (முஸ்லீம்) எனக் குறிபிட்டு இழிவாகப் சீனியர் ஜோன் கொத்தலாவல பேசினார் அவர்களை என்று குறிப்பிடுகிறார். பிரான்சிஸ் டிக்னும். அவரது தாயும் ஜெயவர்த்தனா அவமதிக்கப்பட்டதுக்கு கோபமடைந்தார். அதனால் பிரான்சிஸ் டிக்சன் தன் மைத்துனர் சீனியர் ஜோன் கொத்தலாவலவின் முகத்தில் கோபத்தில் ஓங்கி அறைந்தார். பிரான்சிஸ் டிக்சனைப் பார்த்து ஜோன் “ நீ ஒரு பொடிப்பயல் . நான் உன்னிலும் வயது கூடிய உன் அத்தான் என்று யோசிக்காமல் பலருக்கு முன் என் கன்னத்தில் அடித்துப் போட்டாய். ஆனால் நீ விரைவில் அழிந்து போகப் போவதை நீ அறிவாய்" என்று கோபத்துடன் பேசி ஹாலை விட்டு சென்றார்.

****
அதன் பின்னர், அவர் முன்பு தனக்கு கீழ் பொலீசில் வேலை செய்து, பல காலம் அறிமுகமான சைமன் பெரேராவினதும் அவனின் தம்பி பரேன் சிங்கோகோவின் உதவியுடன் பிரான்சிஸ் டிக்சனை கொலை செய்யத் திட்டமிட்டார். அவர் கொலை செய்ய நியமித்தவர்களுக்கு 500 ரூபாய் கூலி கொடுத்தார்

கொலை நடக்கும் போது தான் இலங்கையில் இருக்கவில்லை அதனால் அந்த கொலைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதை நிரூபிக் வெற்றிட சான்று( Alibi) ஒன்றினை உருவாக்கினார். 1906ஆம் ஆண்டு இலங்கை-ஜப்பான் டிரேடிங் கம்பெனி என்றழைக்கப்படும் ஒரு பொய்யான நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து ஜப்பானுக்கு சென்றார். அக்டோபர் 10 இல் ஜப்பானுக்கு பயணமானார், பிரான்சிஸ் டிக்சன் அட்டிகல சுடப்பட்ட தினம் 1906ஆம் ஆண்டு டிசம்பர் 5.
கொலை செய்ய நியமிதவர்களுக்கு துப்பாக்கியால் சுடத் தெரியாது. மொரட்டுவவுக்கு அருகே உள்ள கிராமத்தில் கள் இறக்கும் பிலோரிஸ் என்பவனை சைமன் பெரேரா ஏற்கனவே தெரியும். பிலோரிஸ் ஒரு யுத்தத்தில் துப்பாக்கி பாவித்து போராடியதால் அவனுக்கு துப்பாக்கியை பாவிப்பது எப்படி என்பது தெரியும். அவன் மூலம் கொழும்பில் துப்பாக்கி விற்கும் கொம்பனி ஒன்றில் துப்பாக்கியும் சன்னங்ளும் வாங்கி பிரான்சிஸ் டிக்சனை சுட்டு கொலை செய்ய ஒழுங்குகள் செய்யப்பட்டது.

பிரான்சிஸ் டிக்சன் அட்டிகல தனது ஆசிரியர் டயஸ் என்பவைரின் வீட்டில் தங்கி இருந்த பொது. இரவு 6 ம் மணிக்குப் பின் வெளியே செல்வதில்லை. அந்த நேரத்துக்கு பின் எவராவது தன்னைத் தேடி வந்தால் அவர்களை தன்னை சந்திக்கவிட வேண்டாம் என்று தனது வேலைக்காரன் சங்ககரனுக்கு சொல்லி வைத்திருந்தார்
****
தன் முகத்தில் அறைந்த சம்பவத்தின் பின் தன் மைத்துனன் பிரான்சிஸ் டிக்சன் அட்டிகலவை திட்டம்போட்டு தன் சந்தேகம் வராமல் கொலை செய்ய தீர்மானித்தான் .
ஒரு நாள் இரவு பிரான்சிஸ் டிக்சன் வீட்டடு விராந்தையில் அமர்திருந்த போது சைமனும் பரோனும் பிலோரிசும் மறைந்து இருந்து கவனித்தார்கள். டிக்சன் விராந்த்யில் இருந்து தோட்டத்துக்கு வரும் பொது அவரை சுடச் சொல்லி சொன்னர்கள்.
பிரான்சிஸ் டிக்சனை தோட்டத்துக்கு வரச் செய்ய “ பிரான்சிஸ், பிரான்சிஸ் கெதியிலை இங்கை வா ” என்று சைமன் கூப்பிட்டபோது, பிரான்சிஸ் டிக்சன் யார் தன்னை அவசரமாக கூப்பிடுகிறார்கள் என்று தோட்டத்துக்கு போய் பார்த்தபோது அவரை நோக்கி பிலாரிஸ் மரறைந்திருந்து சுட்டான். முன்பு பிலாரிசுக்கு பிரான்சிஸ் டிக்சனை அறிமுகம் இல்லை . சுட்ட பின் பிலாரிசை ஒரு குறிபிட்ட பாதை வழியே தப்பி ஓடும் படி சைமன் அவனுக்கு சொன்னான். அதன் நோக்கம் பிரான்சிஸ் டிக்சனை சுட்ட பிலாரிசை தீர்த்துக்கட்டுவதேயாம் . அனால் சைமன் சொன்னபடி பிலாரிஸ் நடக்கவில்லை. அவனுக் தெரியும் எதோ ஒரு காரணத்தால் அவர்கள் சொன்ன பாதையில் தப்பி ஓடும் படி அவர்கள் சொன்னர்கள் என்று. தன் பாதுகாப்பு கருதி அவன் போலீசுக்குப் போய் “ சேர் எனக்கு தெரியாத ஒருவரை நான் சுட்டுபோட்டேன் என்னை கைது செய்யுங்கள்” என்று சொல்லி சரணடைந்தான். தனக்கு பாதுகாப்பு போலீஸ் ரிமாண்டில் இருக்கும் என்று அவனுக்குத் தெரியும்.
சுடப்பட்ட பிரான்சிஸ் டிக்சன் இரு நாட்களுக்கு பின் கொழும்பு அஸ்பத்திரில் 22 வயதில் இறந்தார். இறக்கும் போது தன் மைத்துனரை காட்டிக் கொடுத்து தன் அக்கா அலிஸ் என்பவளை விதவையாக்க அவர் விரும்பவில்லை. தன் சொத்து முழுவதையும் மற்ற இரு சகோதரிகளின் பேரில் எழுதி வைத்தார்.
ஜப்பானில் இருந்த தன் கணவன் சீனியர் ஜோன் கொத்தலாவலைக்கு “ பிரான்சிஸ் இறந்துவிட்டான். அவனின் மரணக் கிரிகைகள் முடிந்தது”
அதற்கு பதில் வந்தது .
“ இறந்தாரா? யார் அவரைச் சுட்டது? என்று சீனியர் ஜோன் கொத்தலாவலாவிடம் இருந்து பதில் வந்தது. அவர் அந்த தந்தி மூலம் கொலையின் ரகசியத்தை தன்னை அறியாமல் வெளியிட்டு விட்டார். அக் காலத்தில் ரேடியோ, டிவி, தொலை பேசி இல்லாத போது அவருக்கு எப்படித் தெரியும் தன் மைத்துனர் சுட்டு கொலை செய்யப்பட்டார் என்று? ஏற்கனவே சீனியர் ஜோன் கொத்தலாவல மேல் குடும்பப் பிரச்னை காரணமாக சந்தேகம் இருந்த போலீசுக்கு, அது போதும் அவரை கைது செய்ய. குற்றவாளிகள் குற்றத்தைச் செய்து விட்டு அவர்களை அறியாமலே சிறு துப்பை விட்டுச் செல்வார்கள்.
ஜோனின் தந்திக்கு சிமோன் “கன்று இறந்துவிட்டது. . காரியம் முடிந்தது” : என்று பதில் தந்தி அனுபினான். இந்த இரண்டு தந்திகளும் போலீசுக்கு நல்ல துப்புகளாக இருந்தன.
சீனியர் ஜோன் கொத்தலாவலா ஜப்பானில் இருந்து கப்பலில் திரும்பியவுடன் அவரை கொழும்பு துறை முகத்தில் வைத்து போலீஸ் கைது செய்தது.. போலீஸ் விசாரனயின் முடிவில்
பரோன் சிங்கோ முதலாம் குற்றவாளியாகவும் , சைமன் பெரேரா இரண்டாம் குற்றவாளியாகவும், கொலை செய்யத் திட்டம் போட்டு, கொலை செய்தவர்களுக்கு பணம் கொடுத்து அவரின் மைத்துனரை கொலை செய்த சீனியர் ஜோன் கொத்தலாவல மூன்றாம் குற்றவாளியாகவும் வழக்கு தொடர்பட்டது. முன் பின் தெரியாத பிரான்சிஸ் டிக்சனை பணத்துக்காக சுட்ட பிலாரிஸ், உண்மையைச் சொல்லி அரச சாட்சியானான் .
14 நாட்கள் கொழும்பு நீதி , மன்றத்தில் வழக்கு நடந்தது . இந்தியாவில் இருந்து பிரபல குற்றவியல் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கு ஆஜரானார்கள். . வழக்கு நடந்து கொண்டு இருக்கும் போது எதிர்பாராத விதத்தில் மூன்றாம் குற்றவாளி, அவமானம் தாங்க முடியாமல் மனைவி அலசுக்கு ஜெயலில் இருந்த போது ஒரு கடிதம் எழுதினார் “ வாழக்கில் சாட்சிகள் சொன்னதை பார்த்து தீர்ப்பு எனக்கு எதிராக இருக்கப் போகிறது உறுதி அதனால் நான் தூக்கில் தொங்கப் போவது நிட்சயம். இது என் இரு மகன்களின் வருங்காலத்தை வெகுவக் பாதிக்கும் அதனால் தீர்ப்பு வரமுன் என் உயிரைப் போக்கி கொள்ள விரும்புகிறேன் என்று கடிதம் எழுதி வைத்து. விஷம் அருந்தி ஜெயிலில் இறந்தார் அவருக்கு விஷம் ஒரு ஜெயில் காவல்கரன் ஒருவன், பணம் பெற்று உள்ளே விஷம் எடுத்து சென்று சீனியர் ஜோன் கொத்தலாவலைக்கு கொடுத்ததாக பின்பு விசாரணையில் தெரியவந்தது . வழக்கு விசாரணை முடிவில் பரோன் சிங்கோவும் சைமன் பெரேராவும் குற்றவாளிகள் என் ஜூரிகள் தீர்பளித்து, நீதிபதி அவர்கள் இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்தார் . வெலிக்கட ஜெயிலில் அவர்கள் இருவருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது
****
விதவையான அலிஸ், சமூகத்தில் பல எதிர்புகளை எதிர் நோக்க வேண்டி இருந்தது . அவளின் கணவன் சீனியர் ஜோன் கொத்தலாவல பொது மக்ளிடையே பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரரானவர் என்ற கருத்து இருந்ததால் தீர்ப்பு கொடுக்ப் பட்டதும் சிங்கள மக்கள் கொதித்து எழுந்தனர் .. அரசு தான் அவரைவிஷம் வைத்து கொன்று இருக்கிறது என பலர் கருதினர். அரச வழக்கறிஞர் வீட்டை மக்கள் தாக்கினார்கள்.
****
காலம் உருண்டோடிது. சீனியர் ஜோன் கொத்தலாவல1909 இல் விஷம் அருந்தி ஜெயிலில் 44 வயதில் இறக்கும் போது சேர் ஜான் கொத்தலாவலவுக்கு 12 வயது . லண்டன் சென்று மேல் படிப்பு படித்து வந்து. சேர் பட்டம் பிரிட்டிஷ் ஆட்சியின் போது பெற்று 1953முதல் 1956 வரை இலங்கயயின் மூன்றாம் பிரதமரானானர். இவரதுமந்திரி சபையில் ஜீ ஜீ பொன்னமபலம். நடேசன், கந்தையா வைத்தியநாதன், மந்திரிகளாக இருந்தனர் என்பது இங்கு குறிப்பிட வேண்டும்
****

எழுதியவர் : ( பொன் குலேந்திரன் – கனடா ) (9-Jul-18, 8:37 am)
பார்வை : 96

மேலே