காதலில் விழுந்தேன்

முதல் பார்வை
எதுவும் நினைக்கவில்லை
சட்டென்று திரும்பி கொண்டேன்.

நீ என்னை பார்ப்பதை உணர்ந்தேன்
திரும்பி மட்டும் பார்த்து விடக்கூடாது என்று மனதில் நினைத்து கொண்டேன்.

நினைத்து கொண்டே திரும்பி பார்த்தேன்
உன் விழியில் பட்ட என் விழியை நகர்த்த முடியவில்லை.

காரணம் தேட வேண்டாம்
நம் மனமே நம்மை குழம்ப வைத்துவிடும்.

மனம் கட்டுப்பாட்டை இழந்து
என்னை பார்த்த அந்த விழியையே நினைத்தது.

காதலில் விழ வைத்தது மனம்,
விழுவது கூட சுகம் தான்.

எழுதியவர் : நிஷா சரவணன் (11-Jul-18, 8:02 am)
பார்வை : 489

மேலே