பேரைச்சொல்லலாமா

அவனும் நானும்
கணவன் மனைவி இப்போது
அதற்கு முன்
அவனும் நானும்
காதலர்.....அதற்கு
முன்னர்
அவனும் நானும்
நண்பர்..........
நண்பனாய் காதலனாய்
நினைத்து அவனோடு
பழகியபோது அவன்
பெயரை பலவாறு
சுருக்கி பெருக்கி
பழகினேன் இன்னும் என்
ஒருமையில் கூட கூப்பிட்டு
இருக்கிறேன் ............
இப்போது அவனோ
இல்லை,இல்லை
அவரோ என் கணவர்
அவரை நான்
பேரவைத்து கூப்பிடவில்லை
என் என்று எனக்கே புரியவில்லை
என்னுள் ஏதோ ஒரு நாணமா
வெட்கமா ....என்னென்று சொல்வது
ஏதோ ஒன்று அதை தடுக்கிறதே
....................யோசித்துக்கொண்டே இருக்கும்போது
எப்.எம் இல் ஒலித்தது அந்த
பழைய பாடல்......'பேரைச்சொல்லலாமா
கணவன் பேரைச்சொல்லலாமா ...........
இப்போது புரிந்துகொண்டேன்
இதுதான் முன்னோர் நமக்கு வகுத்த
ஓர் ஒழுக்கவிதி என்று..............

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (11-Jul-18, 12:12 pm)
பார்வை : 91

மேலே