அச்சுமித்தா

ஏண்டா கலையரசா, அமெரிக்கா போயி ஏழு வருசம் கழிச்சுத்தான் உம் பாட்டியப் பாக்க வந்திருக்கிற. எங் கொள்ளுப் பேரனுக்கு நல்ல பேரா வச்சிருக்கிறயா?
😊😊😊😊😊
இல்லங்க பாட்டிம்மா. நம்ம குட்டி கிராமத்திலகூட ஒரு கொழந்தை பேருகூடத் தமிழ்ப் பேரா இல்ல. அமெரிக்காவில வசிக்கிற தமிழர்களும் போட்டி போட்டுட்டு அவுங்க பிள்ளைங்களுக்கு இந்திப் பேருங்களத்தான் வைக்கிறாங்க. நான் மட்டும் உங்க கொள்ளுப் பேரனுக்குத் தமிழ்ப் பேரா வச்சா நம்ம தமிழர்கள் எல்லாம் என்னக் கேவலமா நெனைக்கமாட்டாங்களா?
😊😊😊😊😊
ஆமாம்டா சாமி. நீ சொல்லறதும் சரி தான். நம்ம மருகாதிய நாமலே கெடுத்துக்கக்கூடாது. ஊரோட ஒத்துப் போறதுதான் நல்லது. சரி எங் கொள்ளுப் பேரம் பேரு என்னடா கலை?
😊😊😊😊😊
உங்க கொள்ளுப் பேரன் பேரு அஷ்மித்(Ashmit).
😊😊😊😊😊
என்னது அச்சுமித்தா? என்ன பேருடா அச்சுமித்து? அதுக்கு என்னடா அர்த்தம்?
😊😊😊😊😊😊
'அஷ்மித்' -ன்னா 'தற்பெருமை' 'செருக்கு' -ன்னு தமிழ்ல சொல்லலாம்.
😊😊😊😊😊
என்ன அநியாயம்டா கலையரசா. பெத்த பிள்ளைக்கு 'தற்பெருமை' -ன்னு பேரு வைக்கறது நல்லவா இருக்குது? ஏண்டா நம்ம தமிழ்ல நல்ல பேருங்களா பஞ்சம்? ஏந்தான் நம்ம தமிழ் சனங்க இந்தி பேருமேல வெறிபிடிச்சு அலையறாங்களோ? தாய்மொழி பெத்த தாயைவிட உயர்ந்ததுன்னு படிச்ச பதருங்களுக்குத் தெரிலயே. உன்ன மாதிரி படிச்சவங்களப் பாத்துத்தாண்டா படிக்காத பட்டிக்காட்டுக்காரங்களும் கெட்டுப் போறாங்க.
😊😊😊😊😊
நீங்க சொல்லறது நூத்துக்கு நூறு உண்மை தான் பாட்டிம்மா. என்ன செய்யறது? நம்ம சமுதாயமே திரைக் காட்சிகளைப் பாத்து சீரழிஞ்சுட்டு வருது. அந்த சிவனே வந்தாலும் நம்மளத் திருத்தமுடியாது பாட்டிம்மா.
■■■■■■■■■■■■◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆●●●●
Ashmit = Pride.
●●●●●●●●●●●●●●●●●●●●●●
சிரிக்க அல்ல. சிந்திக்க. தமிழுணர்வை வளர்க்க.

எழுதியவர் : மலர் (11-Jul-18, 7:33 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 67

சிறந்த நகைச்சுவைகள்

மேலே