மல்லிகையோடு ஓர் ரோஜா உனக்காக 555

என்னவளே...

உன் பின்னலில் காதோரம்
அமர்ந்திருக்கும் ஒற்றை ரோஜா...

என்ன அழகு
பார்க்கும்போதெல்லாம்...

என்னருகில் நீ இருக்க
மல்லிகையோடு ஒற்றை ரோஜா...

உனக்கு சூட்டிவிட
எனக்கும் ஆசையடி...

உன் விழியின்
ஒளியில் நானும்...

என் நிழலில்
நீயும் இருக்க...

அணைத்துவிட துடிக்குதடி
என் மூச்சுக்காற்று உன்னை...

என் மனைவியாக
நீயே வேண்டும்...

ஒவ்வொரு இதயதுடிப்பிலும்
சொல்லுதடி என் இதயம்...

எனக்கான என்னவளே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (11-Jul-18, 7:57 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 234

மேலே