டஃப் ஹவுஸ் கொலை வழக்கு
(DUFF HOUSE MURDER CASE)
1
பெரிய மாளிகை உள்ள வளவுகளுக்கு சொந்தக்காரர்களான உயர் இடத்து வாசிகள் என்றாலே சொத்துக்கள், பிரிட்டிஷ் ஆட்சிக்கு அடிவருடிகளாக சேவை செய்து சம்பாதித்த காணிகள், சேர், முதலியார் பட்டங்கள், அதனால் கிடைத்த அந்தஸ்த்தினால் தோன்றிய தற்பெருமை, சேவை செய் பல வெலைக்கார்கள், வைப்பாட்டிகள் இத்தியாதி இத்தியாதி. இந்த உயர் இடத்து வாசிகளில் ஒருவர் தான் ஒரு மைல் நீளமான பெயரை உடைய “ மஹா முதலியார் சேர் சாலமன் டயஸ் அபயவிக்ரம ஜெயதிலக்க செனவிரத்ன ராஜகுமாரன கடுகரலு பண்டாரனாயக்கா”( Sir Solomon Dias Abeywickrema Jayatilleke Senewiratna Rajakumaruna Kadukeralu Bandaranaike.) சுருக்கச் சொன்னால் சேர் சாலமன் பண்டாரனாயக்கா. இவர் வியாங்கொடவில் உள்ள ஹோரகொல வளவுவின் சொந்தக்காரராக இருந்தவர் .இவரின் மகனும். மருமகளும். பேத்தியும், பேரனும் இலங்கைகை அரசியலில் ஜானதிபதி, பிரதமர், சபாநாயகர் போன்ற பெரும் பதவிகள் வகித்து, அரசியல் சாம்ராஜ்யத்தை ஒரு காலம் நடத்தியவர்கள். சேர் சாலமன் பிரிட்டிஷ் அரசுக்கு செய்த மிகப் பெரிய சேவை கண்டியின் கடைசி மன்னன் ஸ்ரீ விக்ரமராஜசிங்காவை கைது செய்யும் போது பிரிட்டிஷ்க்கு மொழி பெயர்ப்பாளனாக கடமை யாற்றியது. அதனால் பல சலுகைகளும் சேர் பட்டமும் சேர்ந்து அவருக்கு கிடைத்தது. இவரது தந்தை 116 கி மீ தீரம் உள்ள கொழும்பு கண்டி பெரும் பாதையை 19 ஆம் நூற்றாண்டில் உருவாக்கிய பிரிட்டிஷ் பொறியிலார் கப்டன் பிரவுன் என்பவருக்கு உதவியவர் . சேர் சாலமனின் பூர்வீகம் தமிழ் நாட்டில் இருந்து 16 ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு தோணியில் வந்த நீல பெருமாள் என்ற நவகமுவா பத்தினி கோவில் பிரதம பூசாரியை சேர்ந்தது . சேர் சாலமன் டயஸ் பண்டாரனாயக்காவின் மகன் இலங்கையின் பிரதமராக இருந்த சாலமன் வில்லியம ரிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்கே (SW Bandaranayake) .இவரக்ளின் பெயர்களில் பிரிட்டிஷ் பெயர்களின் வாசனை வீசுகிறது.
2
சாலமனின் மகள் மாரில் ஒருவர் பெரும் பணக்காரனான லியோ அல்விஸ் என்பவரை திருமணம் செய்தவர் லியோ அல்விஸ் என்பவரின் 16 வயது சகோதரி லிலியன் ரோசலின் தோற்றத்தில் பெருத்த உருவம் உள்ளவள். சொத்து இருந்த படியால் கேம்ப்ரிட்ஜ் பல்கலை கழகத்தில் படித்து சட்டத்துறையில் பட்டம் பெற்ற பாரிஸ்டர் ஆகி . 1920இல் அழகிய இளைஞனாய் இலங்கை திரும்பிய ஸ்டீபன் செனேவிரத்தினாவை திருமணம் செய்தார் . சிறிது காலம் வழக்கறிஞராக கொழும்பில் வேலை செய்து, அதன் பின் அரசாங்க சேவையில் மதிப்பீட்டளராக (Valuation officer) வேலை செய்தார். 1930இல் அரசாங்க சேவையை விட்டு விலகி, சிறிது காலம் வங்கி ஒன்றில் வேலை செய்து அதன் பின் விவசாயதில் ஆர்வம் கொண்டு தன் தோட்டத்தைக் கவனிக்கத் தொடங்கினார். கால்நடை பண்ணை ஒன்று நடத்தினார்.
ஸ்டீபன் செனேவிரத்தினா என்பவருக்கு அதிக சீதனம் கிடைத்தபடியால் தனக்கு வரும் மனைவி அழகியாக இருக்க வேண்டும் என்று அவர் அதிகம் அக்கறை காட்டவில்லை.
ஸ்டீபன் செனேவிரத்தினா என்பவர், அத்தபத்து முதலியார் சாலமன் செனேவிரத்தினாவின் மூத்த மகன். . ஸ்டீபனின் தாயார் முன்னைய இலங்கை பிரதமர் பண்டாரனாயக்காவின் மாமியார். ஆகவே ஸ்டீபன் செனேவிரத்தினா பிரதமர் பண்டாரனாயக்காவுக்கு மைத்துனர் முறை. சொத்து வெளியே போகாமல் இருப்பதுக்காக அக்காலத்தில் திருமணங்கள் இனத்தவர்களுக்குள் நடந்தது .
ஸ்டீபன் செனேவிரத்தினா பிறந்தது கொழும்பில் இறுதி A1 பாதை வழியே 38 கி மீ தூரத்தில் உள்ள வியாங்கொடவில் . திருமணத்தின் பின் அவரும் மனைவியும் வோர்டு பிளாசில் உள்ள வைட் ஹவுஸ் என்ற வீட்டுக்கு இடம் பெயர்ந்தனர் 1924 இல் செனேவிரத்தினா - ரோசலின் தம்பதிகளுக்கு டெரன்ஸ் என்ற மகன் பிறந்தான். 1927 இல் இரண்டாவது குழந்தை பிறந்து இறந்தது . அதன் பின் தனது தேக ஆரோக்கியத்தில் அக்கறை காட்டாமல் உணவு உண்டதால். நீரழிவு வியாதியால் பாதிக்கப்பட்டாள். அவளின் குடுமப டாக்டர் . தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் படி அவளுக்குச் சொன்னபோது அவள் அதற்கு “ டாக்டர் என் பெற்றோர் குறைந்த வயதில் நீரழிவு வியாதியால் இறந்து போனார்கள் அதனால் நானும் நீண்ட காலம் வாழப் போவதில்லை. இருக்கு மட்டும் எனக்கு விரும்பிய உணவை சாப்பிட்டால் என்ன? என்று லிலியன் ரோசலின் பதில் சொன்னாள்.
இரண்டாவது குழந்தை பிறந்து மரணித்த பின் செனேவிரத்தினா தம்பதிகளுக்கிடையே சிறு சிறு விசயங்களுக்கு முரண்பாடுகள் ஏற்படத் தொடங்கியது. எடுத்ததுக்கு எல்லம் கணவன் மேல் பிழை கண்டு பிடித்து கோபத்தில் லிலியன் ரோசலின் சண்டை போடத் தொடங்கினாள் . மகன் டெரன்ஸ் தகப்பனுக்கு ஆதரவு என்று தெரிந்து ரோசலின், சில சமயங்களில் அவனைஅடிப்பாள்
3
ரோசலினின் பெயரில் வெள்ளவத்தை பகுதியில் இருந்த விலை மதிப்புள்ள சொத்தினை செனேவிரத்தினா விற்க முயன்ற போது ரோசலின் எதிர்ப்பு தெரிவித்து பின் அவள் சம்மதம் பெற்று ,விற்று வந்த பணத்தில் அலவ்வ (Alawwa) , நாவல (Nawala) ஆகிய ஊர்களில் தென்னம் தொட்டமும், வயல் காணிகளும் செனேவிரத்தினா வாங்கினான். அவர் வீட்டில் இருந்த ஜெஸி என்ற வெலைக்காரியோடு கணவனுக்கு கள்ள உறவு இருப்பதாக ரோசலின் சந்தேகப்பட்டாள். அதனால் காரணமின்றி அவளை வேலையில் இருந்து ரோசலின் நீக்கினாள். ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்த ஜெஸி மீது பரிதாபப் பட்டு அவளுக்கு அவன் வாங்கிய நாவல என்ற ஊரில் வாங்கிய தோட்டத்தில் செனேவிரத்தினா வேலை போட்டுக் கொடுத்தான் .
செனேவிரத்தினா குடும்பம் இருந்த வெள்ளை மாளிகை என்ற பெயர் உள்ள வீட்டை விற்ற பிறகு, அவர்கள் ஏப்ரல் 1933 வரை, அர்புதோட்ட தெருவில் வாடகைக்கு இருந்தனர் அதே ஆண்டு சில மாதங்களில் பின் அக்டோபரில் கொழும்பு கொள்ளுப்பியிட்டியாவில் உள்ள பகதலே (Bagatelle) சாலையில் அமைந்த டஃப் ஹவுஸிற்கு ( Duff House) குடிபுகுந்தனர் . அர்புதோட் தெருவில் வசிக்கும் போது, ஒரே வீட்டில் கணவனுடன் இருந்த போது ஸ்டீபனுக்கு பின்வரும் கடிதம் எழுதினாள் ரோசலின் .,
"பணகார அந்தஸ்த்து உள்ள குடும்பத்தில் இருந்து வந்த ரூபாய்100 வாடகைக்கு ஒரு குறுகிய பேய் குடிபுகுந்த வீட்டில் என் குழந்தையுடன் நான் வாழவெண்டி இருக்கிறது ஏதாவது தவறு இந்த வீட்டில் நடந்தால், இங்கேயே நான் தற்கொலை செய்ய தயங்க மாட்டேன். நான் உங்களுக்கு ஒரு சுமையாக இருக்க மாட்டேன்,. ஒவ்வொரு நாளும் காலை, இரவும் பகலும் என்னை உன்னிடம் கெதியிலை கூப்பிடு என்று நான் கடவுளிடம் ஜெபம் செய்கிறேன். நான் 40 அல்லது 50 வருடங்களுக்கு மேல் வாழமாட்டேன், ஏனென்றால் என் பெற்றோர் சொற்ப வயதில் இறந்துவிட்டார்கள். நான் மற்ற வீட்டிற்குச் செல்வதற்கு முன் நீங்கள் எனக்கு ஒரு துப்பாக்கியை வாங்கித் தருவீர்கலா ? தனியாக பாதுகாப்பு இல்லாமல் வாழும் எனக்கு அது அவசியம் வேண்டும். "
****
4
டஃப் ஹவுசில் திருமதி. செனவிரத்ன அவளது பணிப்பெண் அல்பினாவுடன் ஒரே அறையில் தூங்குவாள் . அடுத்த அறையில், மகன் டெர்ரன்ஸ் அவனது நர்ஸ் மேபல் ஜோசப் உடன் தூங்குவான் . அல்பினாவின் கூற்றுப்படி, திருமதி. செனவிரத்ன, தினமும் ஒரு அமைதியற்ற இரவைக் கழிப்பாள். இரண்டு அல்லது மூன்று தடவைகள் விழித்திருப்பாள். மழைபெய்தால் தானே எழும்பிப் பொய் ஜன்னலை மூடுவதும் அதன் பின்வந்து தண்ணீரை குடிப்பதுமாக நிம்மதி இல்லாமல் இருப்பாள்.
திருமதி ரோசலின் செனவிரத்னாவுக்கு தன் கணவன் அவரின் இனத்தவர்களிடம், முக்கியமாக செனவிரத்தினாவின் சகோதிரியிடம் போய் வருவது விருப்பமில்லை. அவர் எங்கே போகிறார் யாருடன் பேசுகிறார் என்பதை ரோசலின் உன்னிப்பாக அவதானித்து வந்தாள் . தனக்கு கணவனின் செயல் பிடிக்காவிட்டால் காரணமின்றி அவரோடு சண்டை போடுவாள். சில சமயம் தன் அறைக்குள் போய் அறையைப்பூட்டிகொண்டு உணவு உண்ணாமல் இருப்பாள். அந்த வீட்டில் பல வேலைக்காரர்கள் இருந்தார்கள். செனவிரத்தின்ன கோழி வளர்ப்பதில் ஆர்வம் உள்ளவர்.
****
5
1933 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் திகதி ஞாயிறு காலை சுமார் 6 மணிக்கு பணிப்பெண் அல்பீனா விழித்துக்கொண்ட பின் காலை உணவு தயாரிக்க . சமையலறைக்கு சென்றாள் . சுமார் 30 நிமிடங்கள் கழித்து
வேலைக்கார சிறுவன் அவளிடம் சென்று அவளை எஜமாட்டி கூப்பிடுவதாக சொன்னான். அவள் திருமதி ரோசலின் செனவிரத்தினாவின் படுக்கை அறைக்குள் இருந்து ஒரு மூச்சு விட்டு கல கல ஒலி கேட்டு அல்பினா
சென்று பார்த்த போது அறைக்குள் ஒரு வித மருந்து வாசனை வீசியதை உணர்தாள் , திருமதி ரோசலின் செனவிரத்தினா கட்டிலின் வெளிப்புற விளிம்பில் கால்கள் தொங்கியபடி பேசாமல் கிடந்ததாள். செனவிரத்தினாவை அவரின் மனவியின் நிலமையை சொல்லி கூப்பிடவுடன் அவர் பதட்டத்தோடு அறைக்குள் வந்து ஒரு புத்தகத்தை எடுத்து தன் மனைவி முகத்தில் விசிறினார் பணிப் பெண்னிடம் வெற்று பீர் பாட்டில்களில் தண்ணீர்கொண்டு வரும்படியும் சிறிது பிராந்தியும் கொண்டு வரும்படி சொல்லி அனுப்பினார் . அவர் அவரின் மனைவிக்கு செயற்கை சுவாசம செய்தார் . திருமதி செனவிரத்தினாவின் அறையில் ஆஸ்பிரின் மாத்திரைகள் உள்ள போத்தல் மேசையில் இருந்தது .
..
6
திருமதி ஸ்டீபன் செனவிரத்தினா - திருமதி ஹாரி டயஸ் பண்டாரநாயக்க மற்றும் சிலரின் குடும்ப மருத்துவர் டாக்டர் எஸ்.சி.போலை கூட்டி வர கார் அனுப்பப்பட்டது. டாக்டர் வந்து ரோசலினை பரிசோதித்த போது அவளின் உயர்பிரிந்து இருந்தது. . அவளிடம் இருந்து குலோரோபோர்ம் (Chloroform) வாசனை வீசியது . பக்கத்தில் இருந்த மேசயில் இருந்த கைகுட்டையிலும் குலோரோபோர்ம் வாசனை வீசியது. முகத்தில் சிறு காயம் இருந்தது.
திருமதி செனவிரத்ன க்ளோரோஃபார்மை பயன்படுத்தும் முறையை நன்கு அறிந்திருந்தார் என்பதற்கும், குளோரோபார்ம் வீட்டில்தான் இருந்தது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருந்தன
ரோசலின் தற்கொலைசெய்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கேள்வி டாக்டர் மனதில் எழும்பியது. அவருக்கு தெரியும் ரோசளினுக்கும் அவளின் கணவனுக்கும் தினமும் பிரச்சனைகள் இருத்தது என்பது. அதோடு அவள் எப்போதும் பதட்டமான நிலையில் சிந்தித்த படியே இருப்பவள் என்பதும் அவருக்குத் தெரியும். ரொசலினின் இறப்பிற்குப் அவளின் கணவன் பொறுப்பாளர் என்றால், குளோரோபார்ம் கவனமாகத் தயாரிக்கப்பட்டு, சரியான நேரத்தில் யாருக்கும் தெரியாமல் ரோசலின் மேல் செயல்படுத்த வேண்டும். அவர் ஒரு கைக்குட்டை மீது குளோரோஃபார்ம் பூசி ரோசலினின் வாய் மற்றும் மூக்கின் கைக்குட்டையை வைப்பதன் மூலம் கொலை செய்வதற்கு சில நிமிடங்கள் தேவை. அதவும் காலையில் பலர் பாத்திருக்க அந்த விதத்தில் சில நிமிடங்களில் கொலை செய்வது சாத்தியமில்லை என்று டாக்டர் கருதினார் .
அதனால் சென்வைரதின மேல் எவ்வித நடவடிக்கையும் எடுக்க அவர் முன்வரவில்லை. பிரேத பரிசோதனையின் பின்னர், மேலதிக அஸ்பிரீன் எடுத்த காரணமாக இதய செயலிழப்பு ஏற்றப்பட்டு மரணம் ஏற்பட்டிருக்கிறது . என ஒரு சான்றிதழை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் வழங்கினார். மேசையில் இருந்த தான் ரோசளினுக்கு கொடுத்த 24 மாத்திரைகள் இருக்கும் போத்தலில் 9 மாத்திரைகள் மட்டுமே மிகுதி இருந்தது என்பதையும் அவர் தன் சான்றிதழில். குறிப்பிட்டார்
7
ரோசலினின் சகோதரர் லியோ டி'அல்விஸ் தன் சகோதரி முகத்தில் சிறு காயங்கள் இருப்பதைக் கவனித்தார், ஆனால் அவரது சகோதரி பல முறை தற்கொலை செய்துகொள்வதாக அச்சுறுத்தியதும் ,அவருக்குத் தெரியும் .
அக்டோபர் 16 அன்று, ரொசலினின் இறுதி சடங்கு நடந்தது. அதைத் தொடர்ந்து தன மைத்துனர் செனவிரத்தினா மேல் லியோ டி'அல்விஸ் சந்தேகப்பட்டார் வளர்ந்தது, வளைந் சொத்துக்காக தன் சகோதரியை தன் மைத்துனர் கொலை செய்து இருகலாம்ம் என்ற முடிவுக்கு வந்தார் அவரது சகோதரிக்கும் ஸ்டீஃபனுக்கும் இடையில் அடிக்கடி சண்டைகள் இருந்ததால் அவளுடைய முகத்தில் இருந்த காயங்களை பற்றி அவரதுக்கு திருப்தி இல்லை. லியோ டாக்டர் போலுடன் கலந்து பேசி , நவம்பர் 7 அன்று போலீசுக்கு ஒரு புகார் கொடுத்தார்.. பொலிஸ் நீதிபதி. டென்னிசன், விசாரணைக்கு உத்தரவிட்டார். ரோசளினின் உடலை திரும்பவும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்து டாக்டர் டி.எஸ். நாயர், திருமதி ரோசலின் செனவிரத்ன கொலை செய்யப்பட்டார் என்திரு தன பரிசோதனை அறிக்கையில் வெளியிட்டார் . குற்றம்சாட்டப்பட்ட ஸ்டீபன் செனவிரத்ன சுப்ரீம் கோர்ட்டின் முன் விசாரணைக்கு நிறுத்தப்பட்டார் .
பல சாட்சிகளை விசாரித்த பின் பின் 7 ஜூரிகளில், 5 ஜூரிகள் செனவரத்தினாவை குற்றவாளி என தீர்ப்பு சொன்னார்கள். . 5 ஜூரிகளில் ஒரு ஜூரி தீர்ப்பு சொல்லும் போது தண்டனை குறைக்கப் படலாம் எனச் சொன்னார்.. நீதிபதி அக்பர் செனவிரத்தினாவுக்கு மரணதண்தடனை விதித்தார்
செனவிரத்தினா அப்பீல் கோர்ட்டில் அப்பீல் செய்ததால் நீதிபதி அக்பர் பாகுபாடு காட்டி குற்றவாளிக்கு எதிராக ஜூரிகளுக்கு நடந்ததை விளக்கி சொன்னது சட்டப் படி தவறு என்பதால் செனவிரத்தினா கிடைத்த மரண தண்டனையை 14 வருட கடூழிய சிறைவாசமாக குறைக்கப்பட்டது . அவர் அந்தத் தீர்ப்பையும் எதிர்த்து பிரிவி கவுன்சிலுக்கு அப்பீல் செய்து பிரபு நீதிபதிகள் அவர் குற்றவாளி இல்லை என முடிவு செய்து அவரை விடுதலை செய்தனர்.
விடுதலயான செனவிரத்தினே அங்கொடாவில் ஒரு காணி வாங்கி கால்நடை பண்ணை நடத்தி வந்தார். விடுதலையாகி சுமார் 23 வருடங்களுக்குப் பின் 65 வயதில் இருதய தாக்கத்தால் திடீர் என மரணமானார் .
( உண்மையும் புனைவும் கலந்த கதை )
*****