நெருப்பாய் இருப்பாய் பெண்ணே

உன்விழியின் பாதை மாறினாலும்
மனதின் பாதை மாறாமல் இருக்க
விழிப்பாய் இருப்பாய்
பெண்ணே!
ஓலைக்குடிசையில் இருந்தாலும்
மாட மாளிகையில் வாழ்ந்தாலும்
கயவர்களின் கண்முன்
நெருப்பாய் இருப்பாய்
பெண்ணே!
எந்நிலை அடைந்தாலும்
கல்வியை போற்றினால்
உயர்வாய் இருப்பாய்
பெண்ணே!
உலகமே மாறினாலும்
ஒழுக்கம் தவறாது இருந்தால்
சிறப்பாய் இருப்பாய்
பெண்ணே!!!