பூர்வீகம்

வயலெல்லாம் தலைசாய்த்திருந்த
நெற்கதிர்கள்...
கால்நடை பசியாற
வாய்க்கால் வடிநீர்
களைப்புற்ற என்னை
அரவணைத்த என்
அப்பத்தாவின் முந்தானை
நான் விளையாடிய
நிலைக்கதவின் குமிழ்கள்
என்றும் மூடாத
கம்பீர வாயில்..
வழிப்போக்கனை
இளைப்பாற வாய்த்த
என் வீட்டுத் திண்ணை
தெருவிற்க்கவே
மனம் கொடுத்த
கதவோர மல்லிகை மரம்
ஊரார் அனைவருக்கும்
தாகம் தீர்த்த
கொல்லைப்புற கேணி
யார் வந்தாலும்
வயிறார சாப்பிட
மச்சியில் நெல்
பாதுகாக்க பட வேண்டிய
என் பூர்வீகம்
வீட்டு மக்களால் பூட்டிக்கிடக்க
என் தலைமுறை கூட
பாராமல் போய்விடுமோ
என்ற அச்சத்தில் நான் ......