தன்னம்பிக்கை
வார்த்தைகள்
வாளெனக் கீறினாலும்
தணிந்தே வளைந்து கொடு.....
வெட்டப்பட்ட மரம்தான்
வீரியமாய்க் கிளைபரப்பும்.....!!!
தங்கமாய் நீயிருந்தும்
தரம் தாழ நேர்ந்தாலும்
தவமே அதுவென மௌனித்திரு....
விலையேற்றம் நேரம்போல
விண்ணைத்தாண்டும் உன் தரம்.....!!!
விழுகின்ற அருவிகூட
வீழ்ந்ததாய் நினைத்ததில்லை....
விதைப்பட்ட விதைகூட
மூழ்கியதாய் கலங்கியதில்லை....
கிளையொடிந்தே போனாலும்
களையிழந்து போனதில்லை......
விதி மாறும் வாழ்க்கையிலே
வழி தவறிப் போனதில்லை.......
கனவுகளே கைவசமிருந்தும்
கண்ணீருக்கே வேலையில்லை.....
சோர்ந்த மனமொன்று
சேர்ந்தே கவியிசைக்கும்
கைதூக்க நட்புண்டு.....
நலம் காக்க சுற்றமுண்டு....
வருந்தாதே....கலங்காதே......
பரந்த இப்புவி மேலே-நாம்
வாழ இடமுண்டு.........!!!!!