புரியாத புதிர்
அடம்பன் ஒற்றைக் கொடி போல்
மேனியில் மென்மை பிழிகிறாள்
என்னோடு சிரிக்கிறாள் ஜொலிக்கிறாள்
நாணத்தில் தன் முகம் சிவக்கிறாள்
சில வேளை அவள் முறைக்கிறாள்
தன் முகம் கடுக்கிறாள்
காரணமின்றிச் சினக்கிறாள்
அடம்பனின் கற்றைக் கொடி போல்
என்னோடு கனக்கிறாள்
பெண்ணே நீ மலரும் பூ மரமா ?
இல்லை மலைக்கும் புயற் காற்றா?
புரியாத புதிரடி நீ
அஷ்ரப் அலி