என் சுவாசக் காற்றே
என் நெஞ்சில் மூச்சுக்
காற்றாய் நுழைந்தவனே
நான் உயிர் வாழும் என் ஜீவனே
ஓர் பவளக் கொடியின்
பார்வை அம்புகள் தைத்ததா?
நீ உடைந்து செல்
அவள் மகுடியின் மயக்கம்
உன்னை மொய்த்ததா
ஆடும் சர்ப்பமாய்
நீ அசைந்து செல்
பரவாயில்லை
நான் வழி(லி) விடுகிறேன்
உன் சுவாசத்தை இங்கிருந்து
நீயே கடத்திச் செல்
அதன் முன்பு என் உடலை
இப் பூமியில் ஜடமாய்
நீ கிடத்திச் செல்
அஷ்ரப் அலி