மொழியானவன்

இரவு தீண்டாத
தென்றலில்,
இமைகள் நீளாத
கண்களால்,
பகலில் தோன்றாத
பகலவன் சாட்சியாக ,
தூரிகை தீண்டாத
ஓவியமான உன்னிடம்,
தூவானம் சிந்தும் தூறலிடா மழையில் நனைந்து,
வார்த்தைகள் வரா
மௌனத்தில்,
வண்ணமிடாத
வானவில் தோன்றுகையில்,
கம்பன் கூறாக் கவியொன்றை,
கரைத்தொடா கடலலையின் அருகே , அமர்ந்துக்கூற -
கானகத்தின் கற்பனைப் புரவியொன்றில்
காட்டாற்று வெள்ளத்தைக் கடந்து வருகையில்-
மலர்களற்ற அந்தச் சோலையிலும்கூட மரமாய் நிற்கும் உன்னை என்னால் மனனம் செய்ய முடியவில்லை??
ஏனெனில் நீ என்னுள் நொடிப்பொழுதிலும் ஜனனிக்கிறாய்!!
அதனால்தான்
நம்மை பிரிக்க முடியவில்லை யாராயினும்-ஏனெனில் நாம் பிறவிக்காதலர்கள்!!
அறுக்கவும் முடியவில்லை நம் உறவை -ஏனெனில் நம்மில் விதைக்கப்பட்டுள்ளோம் நாம் !!
அதனால்தான் என்னவோ ,
உன்னை என் தாய் என்பவர்களை நான் தவறு சொல்லவில்லை,,
மகன்போல என்பவரை மறுக்கவுமில்லை,,
நீதான்- என்
நிலா,வானம், காற்று,,
ஏன்- என் காதல் என்று சொல்பவர்களையும்கூட
நான் எதிர்க்கவில்லை!!
உன்னை
என் முன்னே அழகு, இனியன் என்றுகூறினாலும் நான் ஆச்சரியப் படவில்லை,,
யாரென்னச் சொன்னாலும் "தமிழே" நீ என் மொழியானவன்!!!!!

எழுதியவர் : இரா.சுடர்விழி (21-Jul-18, 12:30 pm)
பார்வை : 394

மேலே