புதைந்த சிலை

திருவிழாவிற்கு நாட்கள் நெருங்கி கொண்டே இருக்கின்றது. குறி சொல்பவர் பூசாரி வீட்டிற்கு செல்கிறார். பூசாரி பார்த்து திருவிழாவில் ஏதோ தடங்கல் வரப்போகிறது என்று சொன்னார்.
என்ன இது சோதனை பல ஆண்டுகளாக நன்றாக நடந்து கொண்டிருந்தது கடவுள் ஏன் இப்படி சோதிக்கிறாய் நாங்கள் என்ன தவறு செய்து விட்டோம் என்ன நடக்கப்போகிறது. இறைவா இந்த திருவிழாவை நன்றாக நடக்கும் போது எந்த தடைகள் வந்தாலும் ஏற்றுக் கொள். ஊர் மக்களுக்கு நன்மையை செய்.
இதை உடனடியாக தர்மகர்த்தாவிடம் சொல்ல வேண்டும் எனக்கும் சரி கிளம்பினார். பின் ஊர் பஞ்சாயத்து ஏற்பாடு செய்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என நினைத்தார். தர்மகர்த்தாவிடம் செல்லும் வழியில் ஒரு நிகழ்ச்சி ஒரு பெரிய ஆல மரம் கீழ் மிகப் பெரிய தாடியை வைத்துக் கொண்டு ஒரு முனிவர் வேடத்தில் ஒருவர் பலருக்கு கேட்கும்படி உரைத்து கூறிக்கொண்டிருந்தார் தனியாக, பூசாரி அவ்வழியே செல்லும்போது அதை கேட்டார். " நடப்பவைகளை நடக்கும் அதில் நல்லதே நடக்கும் பிறருக்கு தெரிவிப்பது மூலம் எந்த பயனும் இல்லை. நீ உணர பிறகு உணரவைத்தாய். தேடிச் செல்லவேண்டிய கட்டாயம் வந்து சேரும். நன்மைக்கே கடவுள் செய்யும் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று" என்று குரல் கேட்ட படியே பூசாரி அவரை கடந்தார். அவருக்கும் இருக்கும் குழப்பங்கள் இன்னும் அதிகமானது. தர்மகத்தா வீட்டுக்கு விரைந்தார். அங்கு தர்மகத்தா இல்லை அவர் வெளியூர் சென்றிருந்தார். அவர் வரை இரண்டு முன்று நாட்களாகும் என அவர் மனைவி தெரிவித்தார். மீண்டும் அவர் அங்கிருந்து கோவிலுக்கு விரைந்தார். கோவிலில் இருக்கும் கடவுளைப் பார்த்து என்ன சோதனை இறைவா என கண்ணீர் விட்டு அழுதார். என்னதான் நடக்கப்போகிறது என இறைவனிடம் வேண்டிக் கொண்டு வீடு திரும்பினார்.


என்ன நடக்கப்போகிறது. திரு விழா நடக்குமா? மக்கள் நன்மைகள் பெறுவார்களா? யார் என்ன செய்ய போகிறார்கள்? மிரட்டுவார்களோ? திருடுவார்களோ? இல்லை ஒன்றுமே நடக்காது. என்ன நடக்கும் என தான் நடக்கும்? பார்ப்போம்


---- ---------தொடரும்

எழுதியவர் : உமா மணி படைப்பு (22-Jul-18, 9:20 am)
சேர்த்தது : உமா
Tanglish : buthaintha silai
பார்வை : 100

மேலே