காதல்
மலர்த் தோட்டத்தில்
வாசனறு பூக்களெல்லாம்
பூத்து குலுங்க
சோலையிலே மாங்கனிகள்
காய்த்து குலுங்க
வண்டுகளும் கிளிகளும்
கனியின் பழரசத்தை
உண்டு களிக்க,
தென்றலும் தெம்மாங்கிசைக்க
வசந்தம் இதுவென்று
குயில் பாட மயிலாட
பெண்ணே, என் மனது மட்டும்
உன்னையே நினைத்து
நாளாய் பொழுதாய் வாடா
உன் மனதில் எனக்கோர்
இடம் இன்னும் தரவில்லையே
ஏங்கி ஏங்கி கிடக்கும்
என் மனதில் பெண்ணே
நீ வந்து மலர்ந்திடும் நாள் எப்போது
என் பார்வையின் காதல் விடுகை ஏற்று
என் கனவை நம் கனவாய்க் கண்டு
நம் காதல் கனவு நனவாக