பூமியின் நிலவு
பூமிக்கு நிலவு ஒன்று
சனிக்கு நிலவோ
ஒன்றல்ல இரண்டல்ல
ஐம்பத்தி மூன்று
நல்லவேளை இந்த
நிலவில் ஒன்று கூட
நம் கண்ணிற்கு தெரியாது
இல்லையெனில் கவிஞன்
நான் திக்குமுக்காடிப்போவேன்
எந்த நிலவிற்கு கவிதை எழுத
எந்த நிலவை நான் கூப்பிடுவேன்
காதலரை சேர்த்துவைக்க
எந்த நிலவை அம்மா கூப்பிடுவாள்
குழந்தைக்கு பால் சோறு ஊட்ட
தாலாட்டு பாடி தூங்கவைக்க
போதுமப்பா இறைவா போதும்
இந்த பூமியில் வாழ்ந்தாலே போதுமப்பா
ஒரு நிலவோடு ஒளிரும் இந்த பூமி.