உன் இதழ்களால் ஓர் காதல் வார்த்தை 555

அன்பே...

உன் விழிகள் சொல்லும் மொழிகள்
எனக்கு புரிவதில்லை...

எப்போதும்
தலைநிமிர்ந்து நடப்பவள்...

என்னை கண்டால் மட்டும்
ஏன் மண்பார்த்து செல்கிறாய்...

உன் ஓரப்பார்வையின்
அர்த்தங்கள் என்ன...

நான் பேசும் வார்த்தைகள்
உன் செவிகளில் கேட்கிறதா...

நீ குரல்
கொடுப்பதுமில்லை...

என் செவிகள்
கேட்பதுமில்லை...

என் விழிகள் மட்டும்
சிலநேரங்களில் புரிந்துகொள்கிறது...

உன் ஓரப்பார்வையின்
அர்த்தங்களை...

உன் விழிகளால்
சொல்லும் காதலை...

உன் இதழ்களால் சொல்லிவிடு
ஒருமுறை என்னுயிரே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (22-Jul-18, 3:58 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 608

மேலே