பசுமை

பசுமை..!
========

சுற்றிலும் சூழ்ந்தவொரு சுந்தரப் பச்சைநிறம்..

அற்புதத்தைப் பார்க்கவும் ஆசை யெழுவதுண்டு.!

சிற்றோலை வேய்ந்த சிறிய குடிலையும்..

முற்றுகை இட்ட முல்லைக் கொடிகளும்.!

கற்றுத் தருமந்தக் காட்சியும் இன்பமிகும்..

விற்பனைக்கு அல்ல விலையில்லாப் பொக்கிஷம்..!

பற்றுக் மிகக்கொண்ட பாவலர் பார்த்தாலே..

கற்பனையைத் தூண்டிக் கவிதை எழச்செயும்.!

=====================================
வெண்டளை விரவிய ஒரு விகற்ப
நாற்சீர் எட்டடிக் கொச்சகம்

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (24-Jul-18, 12:51 pm)
பார்வை : 63

மேலே