சில குற்றவாளிகள்

மின்சார ரயில்
படிகட்டில் பயணம்
மின்கம்பத்தில் மோதி
படியில் பயணம் செய்த
ஐந்து பேர் உயிரிழப்பு
சிலர் படுகாயம்

மரணத்திற்கான காரணங்கள்

போதிய அளவு ரயிலை இயக்கா அரசு
அடுத்த ரயிலில் செல்ல மறுத்த
நம் அவசரம்
சற்றே விலகி வழிவிட மறந்த
சக பயணிகள்
கூட்டத்திற்கு ஏற்ப
ரயிலை இயக்க தெரியா ஓட்டுனர்

எதற்கெடுத்தாலும் ஒரு
கவிதை எழுதும் நான்
எல்லாவற்றையும்
வெறும் செய்திகளாகவே கடந்து போகும் நாம்

உலகம் சில குற்றவாளிகளையும்
சுமந்துதான்
தினமும் சுற்றி கொண்டே இருக்கிறது

எழுதியவர் : ந.சத்யா (24-Jul-18, 5:43 pm)
சேர்த்தது : சத்யா
Tanglish : sila kutravalikal
பார்வை : 101

மேலே