நிலவும், நிலவும் , என் மனமும்
தூக்கம் வாரா இரவு
முற்றத்தில் நின்ற நான்
வானை அண்ணாந்து பார்த்தேன்
அழகான வட்ட நிலா
வான் கடலில் மிதந்து சென்றது
'கிரகண' பாம்பு வந்தது
முழு நிலவை அப்படியே
கொஞ்சம் கொஞ்சமாய் விழுங்கிவிட்டது
நிலவைக் காணவில்லை
வானம் சற்று இருண்டது
மேகம் வந்து சூழ
நிலவோடு பேசி
மனத்தில் சாந்தி கொள்ள நினைத்தேன்
கிரகணம் நிலவைப் பறித்துக்கொண்டு போனது
கனத்த மனதோடு
வீட்டின் உள்ளே நுழைய
காலை வைத்தபோது
மீண்டும் நிலவின் ஒளி கண்டேன்
எதிர் வீட்டு மாடி திறந்த ஜன்னலில்
வானிலிருந்து இங்கு வந்து
ஒளிந்துகொண்டதோ நிலவு
கிரகண பாம்பின் வாயிலிருந்து தப்பி !
நிலவின் மயக்கத்தில் இருந்த நான்
அப்படி நினைத்தேன்
பின்னர் தெளிந்தேன் , நான் காண்பது
நிலவு அல்ல , என்னைப்போல்
தூக்கம் வராது காதல்
ஜுரத்தால் வாடும்
நான் அறிந்த கண்ணியவள் முகம்தான்
என் மனம் நிறைந்தது ஆனந்தம் வந்தது
தூக்கமும் கண்களைத் தழுவ
இன்ப கனவு நாடி நான்
சென்றுவிட்டேன் வீட்டுக்குள்
அவளும் என்னைக் கண்டாளோ தெரியாது
அவள் வீட்டு ஜன்னல் மூடி இருந்தது இப்போது
கிரகணம் விட்டது
ஜன்னலை மூட, வான் நிலவு
மீண்டும் அளவு நிலவாய் வானில்
நீல வான் கடலில் மிதந்து மிதந்து போனது