நெஞ்சில் நிறைந்த நிலா

உன் கோபத்தை
ரசிக்கிறேன்

நீ சொல்லும் பொய்
அழகாக இருக்கிறது

உன்மையை சொல்லவேண்டும்
என்னும்
உன் தவிப்பு
பிடித்திருக்கின்றது

பிரபஞ்சம்
அங்கீகரித்த பின்னும்
விலகி நிற்கும்
உன் பிடிவாதம் அர்த்தமற்றது

உன் கண்நீர்த் துளிகள்
என்னைக் கரைக்கின்றன

சூழ்ச்சிகள் தேவையில்லை
ஒரு புன்னகை போதும்
என்னை வெல்ல

இப்போதாவது சொல்லிவிடலாம்
அவர்கள் நினைப்பது
நடக்கப் போவதில்லையென்று !

எழுதியவர் : Mathibalan (30-Jul-18, 5:25 am)
சேர்த்தது : மதிபாலன்
பார்வை : 450

மேலே