உன்னை என்னவென்று கொள்வதோ நிலவே

உன்னை என்னவென்று கொள்வதோ நிலவே !
காணும் போதெல்லாம்
அறையாய் தேய்ந்து
முழுதாய் வளர்ந்து
காணாமல் சென்று மேகங்களின் நடுவே ஒளிந்து
இந்த இருளில் என்ன மாயம் செய்கிறாய் நிலவே
உன்னை காண ஓடோடி வருவேன்
நீயோ அனல் வேகத்தில் ஒளிந்து கொள்வாய்
குளிர்ந்த நிலவே!
நீ தூய்மையின் வடிவமோ
வெண்மையின் ஒளி திடலே
நீ கதிரவனின் எதிர்மறையோ ?
கதிரவன் கோபமாய் கொப்பளிக்க
நீயோ குளிர்ந்து வருகின்றாய்.
நீ இருளில் ஏனோ கவலையெல்லாம் மறக்க செய்கிறாய் .
உன்னை கண்டால் உலக தேவதைகள் எல்லாம் தோற்று விடுவார்களே
அதனால் தான் இன்னும் பூமிக்கு வர வில்லையோ ?
நீ வரவில்லை என்று
மனிதன் உனை காணவே வந்துவிட்டான் !
நீயோ வெட்கி மேகங்கள் நடுவே
ஒளிந்து கொல்கின்றாயே - வெள்ளி நிலவே
ஏதேதோ உருவங்கள் தாங்கி கொண்டு
மனிதனுக்கு பல புதிர்களை காண்பித்துக்கொண்டு
பாட்டி சுட்ட வடை கூட உன்னோடு வைத்து கொண்டு
அழகு காண்பிக்கும் நிலவே
மீண்டும் உன்னை எப்போது காண்பேன் என்று
இந்த அமாவாசைகளில் தவம் கிடக்கின்றேன்
அரைநிலவாய் நீ வர
முழு நிலவிற்கு நான் காத்து கிடப்பேன்
முழு நிலவாய் நீ தெரிய அரைநிலவுக்காக நான் தேய்ந்து போவேன்
என் எப்படி செய்கின்றாய் ?
உன்னை ஒரு முழுதாய் காணவே முடியாமல் திகைக்கின்றேன்
உன்னை என்னவென்று கொள்வதோ
வெண்ணிலவே !குளிர்நிலவே !

எழுதியவர் : பிரகதி (30-Jul-18, 3:47 pm)
சேர்த்தது : அரும்பிசை
பார்வை : 184

மேலே