தனிமை

இனிமையாக இருக்க வேண்டிய நேரத்தில் தனிமையாக இருக்கிறேன்
நண்பர்களுடன் கழிக்கும் தருணத்தை தனிமையோடு கழிக்கிறேன்
காதல் பிரிவால் தனிமை எனும் சிறையில் அகப்பட்டுக்கிடக்கிறேன்
சுற்றி ஆயிரம் உறவுகள் இருப்பினும் தனிமை என்ற உணர்விலே வாழ்கிறேன்
நண்பனின் தொலைவால்,சோகம் சுழுந்து தனிமை எனும் சுகத்தை உணர்கிறேன்
விரைந்து செல்லும் காலங்கள் கூட தனிமையால் மெல்ல செல்கின்றன
பிடித்த சிலர் இருந்தும்,இல்லாத நிலை பொது தனிமையின் அருமையினை அறிந்து கொள்கிறேன்
நட்பின் நினைவுகளை கொண்டு தனிமையோடு பேசி பழகி கொள்கிறேன்
அன்றோ நட்பின் பாதையில் சென்றேன்,இன்றோ தனிமை எனும் பாதை என்னை ஆட்கொண்டுசெல்கிறது
சிறிய கலகத்தினால், தனிமை இனிமையை வீழ்த்திகிறது
தனிமையினை போக்கவே இக்கவிதையினை எழுதினேன்

எழுதியவர் : manikandan karunanithi (31-Jul-18, 5:10 pm)
சேர்த்தது : mani
Tanglish : thanimai
பார்வை : 2969

மேலே