கணை நுனி மௌனவிஷம்

மீளுதல் என்பது
உன் கொய்தலில் துவண்டது.
போர் பயின்ற சொற்கள்
அள்ளிபோயின ஒளிக்குன்றை.
விக்கித்து வெருண்ட வானம்
கக்கி எறிந்த நெருப்பினில்
உருகிய கற்சிலைக்கு
காதலென்று உளி துளைக்க
ஆற்றை எரித்தது உன்
துளி கண்ணீர் பாஷாணம்.
மீந்த உடலின் மிச்சமெல்லாம்
உன் பிராண்டல்கள்...
நீ கிழித்த என் மடல்
மின்னல் பிதுக்கி
விழி உண்டு கரைந்தது.
பாதைகள் அறிகிலேன்...
வஸந்த கால வெட்டையாய்
பேயின் உணவாகி போன
என் உயிரின் வேரில்
நீ குடித்த மயான சாற்றில்
கலங்கி ததும்பும் பூமி.
கொள் நீ இனியும்
என் குமுறலில் தேங்கிய
சுவையா ருசியின்
கொடுக்குப் பாய்ச்சலை.

எழுதியவர் : ஸ்பரிசன் (3-Aug-18, 11:31 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 88

மேலே