வாழ்க்கை அற்புதங்கள்
எதிர்பாரா நேரமதில் நிகழும் அற்புதங்கள் கீழே...
சொல்லாமல் வந்து நனையச் செய்யும் கண்ணீர்...
பாசத்தை மட்டுமே முகவரியாகக் கொண்ட ஆனந்த தருணங்கள்...
தனிமையில் தவிக்கவிடாமல் சூழ்ந்துகொள்ளும் நினைவுகள்...
திகட்டும் திருப்தியை உண்டுபண்ணும் அன்பு...
இருதயத்தை நிரப்பும் காதல்...
மனசெல்லாம் சிறகடிக்கும் கனவுகள்...
சிந்தையை உற்சாகமூட்டியபடி இருக்கும் எதிர்காலம்...