சுதந்திரம்

அதிஷ்டம் கொண்ட ஆண் இனமே
சுதந்திரத்தை நீ பெற்றுவிட்டாய் கொண்டாடு!!!
நான் எதற்கு கொண்டாட வேண்டும்?
சுதந்திரம் என்ற சொல்லும் முழக்கமும்
ஏட்டில் மட்டுமே பார்த்த நாங்கள்...
அனுபவத்தில் அது சாத்தியம் இல்லை.
பெண் பிறப்பதெற்கே சுதந்திரம் இல்லை
தவறி பிறந்து விட்டால்
கள்ளி பால் காத்து இருக்கிறது............!
எங்களை கல்லறைக்கு இட்டுச்செல்ல !!!!!!!!
இந்த சுதந்திரம் பொய்யான சுதந்திரம்
பொதுவானது அன்று - இது
ஆணுக்கும் அகிலத்திற்கும் கிடைத்த சுதந்திரம் !
பெண் பால் என்று ஆண் பாலாக மாறி பிறப்போமோ
அன்று தான் உண்மை சுதந்திரம்

எழுதியவர் : வெங்கட்ராமன் சீதா (18-Aug-11, 2:52 am)
சேர்த்தது : deepu ela
Tanglish : suthanthiram
பார்வை : 289

மேலே