என் காதல் தேவதையே

தேவதையே என் தேவதையே
இத்தனை நாள் எங்கிருந்தாய்...
எண்ணமெல்லாம் உன்னை எண்ண
எந்தன் முன்னே வந்து நின்றாய்....
கனவில் உன்னை கண்ட போதே !
காதல் கொண்டேனே....
கண் முன்னே வந்து நின்று என்னை
கொள்ளை கொண்டாயே...
நம் உள்ளமிரண்டும் ஒன்றாகி உறவாட
என்னை உன்னிடம் உந்துதடி....
எனக்குள்ளும் இப்போது காதல்
வெள்ளம் கரை புரண்டு ஓடுதடி....
உன்னை கண்டு காதல் கொண்டு
வாழத்தானே இந்த யுகம்
நானும் எடுத்து பூவை கொடுத்து....
காதல் சொல்வேனே
உன்னை
கவர்ந்து செல்வேனே....

எழுதியவர் : அருண் குமார் (5-Aug-18, 4:02 pm)
பார்வை : 1412

மேலே