சென்று வா உடன்பிறப்பே

செம்மொழிக் காத்த புதல்வனே
முத்தமிழ் மூச்சாக கொண்டவரே
முரசொலி கொடுத்த வித்தகரே
விடைகொடுக்க மனமின்றி வழியனுப்பினோம்
சென்று வா உடன்பிறப்பே

அரசியலில் வெற்றித்தோல்வி சாதாரணம்
இன்று பொய் நாளை வா என்றதும்
யமனும் உன் சொல் கேட்டானோ!
உன்னால் தமிழ் அழகா? இல்லை
தமிழால் நீவீர் அழகா? யானறியேன்!
சென்று வா உடன்பிறப்பே

விமர்சனங்கள் உனக்கு புதிதல்ல
உன் எதுகை மோனை சிந்தனையும்
பகுத்தறிவு பதிலடியும்
நயமுறும் நகைசுவை பேச்சுகளும்
இறந்தும் நினைவூட்டும்நின் மொழிப்புலமையை
சென்று வா உடன்பிறப்பே

மூப்பின் காரணத்தால் மறைந்தாலும்
மூத்ததலைவரது மரணம் பேரிழப்பே
அரசியலும் இலக்கியமும் துயருறும்
சரித்திரம் சரிந்த தென்று
சென்று வா உடன்பிறப்பே

உன் அரசியல் சாதனைகள்
இனி சரித்திரம் சொல்லும்
பேனா சிந்தனையாளன் இனி
கல்லறையில் கவி படைப்பார்
சென்று வா உடன்பிறப்பே

தமிழ் இனி மெல்ல வாழும்
தலைமுறைகள் தாண்டி தமிழ் வாழுமுன்னால்
வான்புகழ் கண்டீர் வாழ்ந்த பின்பும்
மண்ணும் உன்னால் புனிதம் கொண்டது
சென்று வா உடன்பிறப்பே

மரீனா கண்ட மறைவில்
தமிழின் கலங்கரை விளக்காய்
கடற்கரை அழகூறும் உன்னால்
உதயசூரியன் உறங்குது பாரீர்
சென்று வா உடன்பிறப்பே

பகுத்தறிவு பகலவனே, முரசொலி மைந்தனே
அரசியல் அச்சாணி, தமிழ் தாத்தா
முத்தமிழ் அறிஞ்ஞரே, கவி புதல்வா
கொள்கைக் காவலரே கட்டுமரத் தோணியே
ஓய்வெடு உன் சகாக்களோடு
சென்று வா உடன்பிறப்பே

எழுதியவர் : அருண்மொழி (8-Aug-18, 6:08 pm)
பார்வை : 541

மேலே