காதல்

உன்னோடு தேநீர் குடிக்க ஆசை .....!!
உன் கை பிடித்து சிறிது தூரம் நடக்க ஆசை..!!
உன் தொடுதிரையில் நாமிருவர் சுயபடம் எடுக்க ஆசை...!!!
தோளில் துயில் கொண்டு பகல் பொழுதே
மாலையை தூண்டிலிட்டு இழுக்க ஆசை...!!!
வால்பாறைக்கு உன்னோடு
வாகனத்தில் செல்ல ஆசை...!!!
மெரினாவின் உப்பு காற்றை
உன்னோடு சேர்த்து பூவாசமாய் மாற்ற ஆசை...!!!
பூங்காவிற்கெல்லாம் என்
பூங்கோதையை கூட்டி செல்ல ஆசை...!!!
நான் வாங்காத ஆசையெல்லாம்
முத்த விலை கொடுத்து உன்னிடம் வாங்க ஆசை...!!!
நான் தூங்காத இறைவையெல்லாம்
உன் பொன்னடி வாங்கி தூங்கி கழிக்க ஆசை...!!!
பேசாத கதையெல்லாம் பேசிட
நமக்காக ஒரு நாள் மட்டும் நூறு மணி நேரமாய்
பகல் பொழுதை வடிமைக்க ஆசை.......!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : ராஜேஷ் (8-Aug-18, 6:09 pm)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : kaadhal
பார்வை : 203

மேலே