சாதி
அழகே
அன்பே
ஆருயிரே
என் காதலா
வருங்காலக் கணவா(கனவா)
எல்லளவும் எண்ணவில்லை
என் ராசாவே உனைப் பிரிவேனென்று....
எந்தை போல் எனை நீ
ஏந்த எந்த நாளும் உனையே நினைந்திருந்தேனே....
துளிதூரம் உனை நீங்கி நடவேனா?
தூக்கம் இழந்து தவிக்கிறேனே
துக்கத்தில் நெஞ்சை அடைக்கிறதே
காதல் இதயத்தை துடைக்கிறதே...
உன் ஞாபகங்கள் உள்ளத்தை தொலைத்தெடுக்கிறதே...
உலகம் இருண்டு போகிறது
நீ தீண்டா என் உடம்பு செல்லரித்துப் போகிறதே...
எட்டுத்திக்கும் என்னுள் உன் நினைப்புதானடா....
என்னை எட்டி உதைத்தது சாதிடா....இது எந்த ஊர் நீதிடா....
மண்ணில் பிறந்ததே உனக்காய் என்றெண்ணினேனே இன்று சாதி தீயில் வேகிறேனே...
உனை நீங்கி உயிர் நோகுறேனே...
மயிலே
மன்னவா
என் காதல் மன்மதா
அடுத்த சென்மமேனும் சாதியற்ற ஊரில் பிறப்போம்....நம் காதலை சாகடிக்காமல் சேர்ந்து காப்போம்
...