காத்திருப்பு

இறகினைக் கையிலேந்தி
இமையோரம் நீர்த்துளிகளோடு
இதழ்குறுக்கிக் காத்திருக்கிறாள்
இதயத்தை கவர்ந்தவனோ
இடமது பெயர்ந்து
இடரதைக் கொடுத்து
இளகிய மனந்தனில்
இன்பதையேன் பறித்தான்

எழுதியவர் : (9-Aug-18, 3:39 pm)
சேர்த்தது : வினோத்
பார்வை : 265
மேலே