அறிந்தும் அறியாமலும்
பலகோடி மக்கள்
வாழும் இவ்வுலகில்
உன்னை மட்டும்
நான் நேசிப்பது ஏனோ ?
என் வாழ்க்கை முழுவதும்
உன்னுடன் வாழ நினைக்கும்
இதயம் ஏனோ ?
உன் கைவிரல் பிடிக்க வேண்டும்
என என் கைகள்
என்னிடம் வேண்டுவது ஏனோ ?
இமைக்காமல் உன்னை
காண கண்கள்
ஆசை கொள்வது ஏனோ ?
ஓயாமல் உன்னையே
நினைத்துக்கொண்டு இருக்கும்
நினைவுகள் ஏனோ ?
நான் வாழ நீ வேண்டும்
என ஏங்கும் இந்த
உயிர் ஏனோ ?
என்னவனே ,
உன் இதயத்திடம் பேசி பார் ...
என் ஆசையான இந்த
கேள்விகளுக்கு பதில்
உன்னிடமும் தோன்றும்
அதே கேள்விகள் தான் ...