கண்களின் ஏக்கம் நீயே
என் இமைகள் அசையாமல் தேடுவது உனையே....
இமைகள் அரியா...இதயம் அறிந்த உண்மையை.....
ஏக்கங்ள் மட்டுமே என் கண்களுக்கு உரிதான ஒன்று என்று.....
காலையின் அத்தியாயத்திலும் மாலையின் மறைவிலும் நீயே வேண்டும் என்று எண்ணுகிறேன்.....
எண்ணங்களில் வந்து போவது நீ மட்டும் இல்லை.....கடந்த கால நினைவுகளும் தான்........
கடந்த நாட்களை திரும்ப கேட்கிறேன்
என் நிகழ்காலத்தை நகர்த்த.....
ஆனால் நீ தந்ததே அந்த நினைவுகளை மட்டுமே.....
என் சிரிப்பில் இனிமை இல்லை...
நிழலில் உண்மை இல்லை.....
நான் சுவாசிப்பதே என் கரம் உனை சேரும் என்று.....
ஏற்று கொள்வாயா இல்லை கொல்வாயா நீயே சொல் என் தலைவா.....
காட்சிக்கு உரிய ஓவியம் நீ மட்டுமே.....
வந்து இறந்த என் இதயத்திற்கு உயிர் கொடுத்து விட்டு போ...........
என்றும் நீங்கா நினைவுகளுடன்......
என் கைகள் உனை சேர காத்திருக்கிறேன்......