கலைஞர்

அஞ்சுகம் ஈன்ற அற்புதம் நீ

ஆறாம் அறிவினைக் கொண்டு ஆட்சி செய்தவர் நீ

இலக்கியத்தில் இமயம் தொட்டவர் நீ

ஈன்ற தாயுக்கு பெருமை தந்தவர் நீ

உதயசூரியனையும் உன் கையில் அடக்கியவர் நீ

ஊரையும் சேரியயையும் ஒன்று சேர்க்க நினைத்தவர் நீ

எழுத்துக்களால் எதிரியை வென்றவர் நீ

ஏழு பிறப்பிலும் உன் புகழ் நிலைக்க உழைத்தவர் நீ

ஐ விரல் காட்டி ஆட்சி அமைத்தவர் நீ

ஒரு நாளும் சுய நலம் எண்ணாதவர் நீ

ஓய்வின்றி உழைத்தவர் நீ

ஒளவை தமிழையும் மிஞ்சியவர் நீ.
ஆக மொத்தத்தில் நீயும் உன் எழுத்துக்களும் தான் எங்களுக்கு உயிர் எழுத்து தலைவா..

ஜெ.ஜெயசூர்.

எழுதியவர் : ஜெ.ஜெயசூர் (9-Aug-18, 9:12 pm)
சேர்த்தது : ஜெ ஜெயசூர்
பார்வை : 442

மேலே