ஞாபகம்

புரட்டிப்போடும் ஞாபகங்களில் புதைந்தன நினைவுகள்

நினைவுகளின் பக்கங்கள்
திரும்பிப் பார்க்கும் போது
கண்ணீர் துளிகளின் மிச்சம்

கை கோர்த்து ஒரு பயணம்
கதை பேசி ஒரு பயணம்
தன்னிலையில் ஒரு பயணம்
சிரிப்புடன் ஒரு பயணம்
சிந்தனைக்குள் ஒரு பயணம்
விளையாட்டாய் ஒரு பயணம்
விதி மாறிவிட்ட ஒரு பயணம்
நினைவுகள் தரும் நிஜங்களோடு ஒரு பயணம்
கனவுகள் ஏந்திய ஒரு பயணம்
அனைத்தும் நினைவுகளுடனே.....

காலங்கள் தாண்டிய நினைவுகள் கவிதையாய்......

எழுதியவர் : உமா மணி படைப்பு (9-Aug-18, 8:43 pm)
சேர்த்தது : உமா
Tanglish : gnaapakam
பார்வை : 121

மேலே